கமலின் மருதநாயகம் படம் மீண்டும் உருவாகுமா..? வரும் புதிய டெக்னாலஜி.!

kamal
kamal

நடிப்பிற்கு பெயர் போன உலகநாயகன் கமலஹாசன் இதுவரை 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் இவர் கடைசியாக நடித்த விக்ரம் திரைப்படம் கூட வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது இந்த திரைப்படத்தை தொடர்ந்து கமல் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். ஒரு பக்கம் படங்களில் நடித்துக் கொண்டிருக்க மறுப்பக்கம் தனது ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் பல்வேறு படங்களை தயாரித்தும் வருகிறார்.

இதனால் உலகநாயகன் கமலஹாசன் செம்ம சந்தோஷத்தில் இருக்கிறார் உலகநாயகன் கமலஹாசனுக்கு மருதநாயகம் என்னும் கனவு படத்தை எடுக்க வேண்டும் என்பதுதான் அதிகம் ஆசை. ஆனால் பட்ஜெட் காரணமாக சில காட்சிகள் மட்டுமே எடுக்கப்பட்டு 90 காலகட்டங்களில் கைவிடப்பட்டது. அதன் பிறகு இந்த படத்தைப் பற்றி எந்த ஒரு பேச்சும் இல்லை.

ஆனால் சினிமா பிரபலங்கள் தொடங்கி ரசிகர்கள் வரை கமலின் மருதநாயகம் படத்தை பெரிய அளவில் எதிர்நோக்கி இருக்கின்றனர். ஆனால் கமலோ இந்த படம் குறித்து பல தடவை சொல்லிவிட்டார். இந்த படத்தின் பட்ஜெட் அப்பொழுது 150 கோடி இப்பொழுது 700 கோடி கிட்டத்தட்ட வரும் எனக் கூறியுள்ளார் அதற்கான பட்ஜெட்டை ரெடி செய்து கொண்டு புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தினால் மட்டுமே இந்த படத்தை எடுக்க முடியும் என கூறினார்.

ஆனால் ஒரு பக்கம் கமலுக்கு வயதாகிக்கொண்டே இருக்கிறதால் இந்த படம் உருவாகுமா? உருவாகாதா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ் சினிமாவிற்கு பல புதிய டெக்னாலஜிகளை கொண்டு வந்தவர் கமலஹாசன் தான் அவர் தனது மருதநாயகம் படத்திற்கும் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நிச்சயம் இந்த படத்தை எடுக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

Motion capture deaging என்ற முறையில் கமலே மருதநாயகமாக நடிப்பதாக ஒரு செய்தி உலா வந்து கொண்டிருக்கிறது. ஆனால் மருதநாயகம் படம் குறித்து கமல் வெகு விரைவிலேயே வாய் திறந்தால் மட்டுமே அது உண்மையா இல்லையா என்பது தெரியவரும். இதை தெரிந்து கொள்ள அவரது ரசிகர்களும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.