உலக நாயகன் கமலஹாசன் திரை உலகில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் இவர் அந்த படங்களில் போடாத கெட்டப்பே கிடையாது சினிமா உலகில் இப்பொழுதும் தொடர்ந்து படங்களில் நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார். இவர் கடைசியாக நடித்த விக்ரம் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து கிடப்பில் கிடந்த இந்தியன் 2 திரைப்படத்தில் கமல் நடிக்க ரெடியாக இருக்கிறார் அந்த படத்தின் சூட்டிங் தற்பொழுது விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் கமலை வைத்து வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்க கௌதம் வாசுதேவ் மேனன் திட்டம் திட்டி உள்ளார்.
அதனை வெந்து தணிந்தது காடு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கௌதம் வாசுதேவ் மேனன் கூறினார். அதில் அவர் சொன்னது என்னவென்றால் நானும் கமலும் வேட்டையாடு விளையாடு படத்தில் தொடர்ச்சியில் பணியாற்ற இருப்பதாக கூறினார். இந்த நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தில் எழுத்தாளராக பணியாற்றிய ஜெயமோகன்.
சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அப்பொழுது அவர் சொன்னது வேட்டையாடு விளையாடு இரண்டாவது பாகத்தின் அடிப்படை கதை இறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார் மேலும் பேசிய ஜெயமோகன் வேட்டையாடு விளையாடு படத்தின் ஒன் லைனர் குறித்து இயக்குனரிடம் விவாதித்ததாகவும்..
அதை மேலும் மேம்படுத்தும் திட்டத்தில் இருப்பதாகவும் கூறினார் படத்தில் டி சி பி ராகவனின் வாழ்க்கையை மனதில் வைத்து அவர் இப்பொழுது ஓய்வு பெற்றவராக இருப்பார் என்றும் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்ய மீண்டும் பணிக்கு அழைக்கப்படுவதில் இருந்து கதை மீண்டும் தொடங்கும் என கூறினார்.