அநியாயத்தை தட்டி கேட்பாரா கமல்.! பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் செரினா..

bigg-boss-124
bigg-boss-124

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக மூன்று வாரங்களாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு யார் வெளியே போவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. மேலும் முதல் போட்டியாளராக சாந்தி மற்றும் இரண்டாவது போட்டியாளராக அசல் கோளாறு ஆகிய இருவரும் வெளியேறிய நிலையில் ஜிபி முத்து தானாக வெளியேறினார்.

மேலும் வார வாரம் மக்களும் தொடர்ந்து தங்களுக்கு பிடித்தவர்களுக்கு அதிக ஓட்டுகளை வழங்கி வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது குறைந்த வாக்குகளை பற்றி இந்த வாரம் செரினா வெளியேறுகிறார் இந்த வாரம் நாமினேஷனில் விக்ரமன், அசீம், கதிரவன், ஆயிஷா, செரீனா ஆகியோர் இடம் பிடித்தனர்.

இதில் மக்களின் அதிக ஆதரவை பெற்று விக்ரமன் முதலிடத்தையும் அடுத்ததாக அசீம் இரண்டாவது இடத்தினையும் பிறகு கதிரவன் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளார்கள். முக்கியமாக அசீமுக்கு அதிக ஓட்டுகள் கிடைத்துள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியமாக இருந்தது வருகிறது. கமம் அவரை மிகவும் கடுமையாக கண்டித்திருந்தார்.

எனவே அசீ ம் தன்னை திருப்பிக் கொண்டு ஒழுங்காக விளையாடு வந்தார் எனவே இவருடைய நடவடிக்கைகளில் மாற்றம் இருந்ததால் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மிகவும் அமைதியாக எந்த சண்டைக்கு போகாமல் இருக்கும் கதிருக்கும் கணிசமான ஓட்டுகள் பெற்று இதிலிருந்து தப்பித்து இருக்கிறார் பிறகு குறைவான ஓட்டுகளை ஆயிஷா பெற்றிருக்கும் நிலையில் இவரை விடவும் மிகவும் குறைவாக செரினாவுக்கு கிடைத்து இருக்கிறது எனவே இவர் தான் மிக குறைவான ஓட்டு வித்தியாசத்தில் இருந்து வருகிறார் எனவே இந்த வாரம் வீட்டை விட்டு சரினா வெளியேறுகிறார்.

கடந்த வாரம் நடந்த டாஸ்க் கீழே விழுந்த அடிபட்ட நிலையில் உயிருக்கு போராடுவது போல் சீன் போட்ட இவரை பார்த்த ரசிகர்கள் ஆஸ்கர் விருது பெற்ற இவர் எப்படி எல்லாம் நடிக்கிறார் பாருங்கள் என கூறி வந்தார்கள் மேலும் இவரை தொடர்ந்து ஏராளமான போட்டியாளர்கள் இந்த வாரம் ஓவராக பேசி வந்த நிலையில் அதனை எல்லாம் கமலஹாசன் அவர்கள் தட்டி கேட்பார் என ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.