தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை காஜல் அகர்வால்.இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழில் ஏகப்பட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தது மட்டும் இல்லாமல் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு திரைப்படங்களில் நடித்து ஹிட் கொடுத்துள்ளார்.
அந்த வகையில் நமது நடிகை தமிழில் தவிர்க்க முடியாத நடிகை ஆக வலம் வந்து கொண்டிருந்தது மட்டுமில்லாமல் பல்வேறு மொழிகளிலும் இவர் திரைப்படங்களில் நடித்து வந்தார். அந்த வகையில் திடீரென நமது நடிகை கடந்த 2020 ஆம் ஆண்டு கௌதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவ்வாறு திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து தான் திரைப்படத்தில் நடிப்பேன் என்று கூறியது மட்டும் இல்லாமல் சொன்னபடியே திரைப்படத்தில் நடித்து வந்தார்.ஆனால் திடீரென தான் அனைத்து திரைப்படங்களிலிருந்தும் விலக ஆரம்பித்தார். பின்னர் அதன் பிறகு தான் தெரிந்தது நடிகை காஜல் கர்ப்பமாக இருப்பது.
அந்த வகையில் சமீபத்தில் ஒரு ஆண் குழந்தைக்கு தாயான நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய மகனுடன் இருக்கும் புகைப்படங்களை அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து ரசிகர்களின் வாழ்த்துக்களை பெற்று வருகிறார். மேலும் குழந்தை பிறந்த பிறகு காஜல் அகர்வால் எப்பொழுது நடிக்க வருவார் என ரசிகர்கள் ஆவலுடன் இருந்தார்கள்.
அந்த வகையில் சமூக வலைதள பக்கத்தில் அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில் தற்பொழுது அவர் நடிப்பில் அதிக அளவு கவனம் செலுத்துவது போல் கிடையாதாம்.ஏனெனில் தன்னுடைய குழந்தையை சிறப்பாக வளர்க்க வேண்டும் என்ற காரணத்தினால் தான் அவள் திரைப்படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லையாம்.
ஆனால் வருகின்ற 2023 ஆம் ஆண்டு பல்வேறு புது திரைப்படங்களில் நடிகை காஜல் அகர்வால் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.இவ்வாறு வெளிவந்த செய்தியின் மூலமாக ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளார்கள்.