தனுஷ் – ஐஸ்வர்யா மீண்டும் ஒன்று சேருவார்களா.? நிருபரின் கேள்விக்கு பதில் அளித்த கஸ்தூரிராஜா..! என்ன சொல்லியுள்ளார் பாருங்கள்..

dhanush
dhanush

தனுஷ் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக இருக்கிறார் இவர் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் அந்த வகையில் தனுஷ் கடைசியாக நடித்த திருச்சிற்றம்பலம் படம் வெற்றி பெற்றது அதனைத் தொடர்ந்து தனது அண்ணன் செல்வராகவனுடன் கைகோர்த்து தனுஷ் நடித்த நானே வருவேன் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 29ஆம் தேதி கோலாகலமாக வெளியாக இருக்கிறது.

இந்த படத்தில் தனுஷ் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அவருடன் கைகோர்த்து இந்த படத்தை இயக்கிய செல்வராகவனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மேலும் இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு மற்றும் பல முக்கிய பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை மக்கள் மற்றும் ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்நோக்கி இருக்கின்றனர்.

இப்படி இருக்கின்ற நிலையில்  தனுஷின் அப்பா கஸ்தூரிராஜா தனது இரண்டாவது மகன் தனுஷ் பற்றி பேசி உள்ளார். கஸ்தூரிராஜா அவர்கள் ரவாளி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லீ மேஜிக் லான்டர்ன் திரையரங்கில் நடைபெற்றது அதில் சிறப்பு விருந்தினராக கஸ்தூரிராஜா, ஜெயபிரகாஷ், கஞ்சா கருப்பு, அப்புகுட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்து பேசிய கஸ்தூரிராஜா தாமரை இலக்கியம் என்பது நான் எழுதிய முதல் புத்தகம் தமிழ் மொழியின் பெருமை பழமை கலாச்சாரம் என அனைத்தும் அதில் எழுதி உள்ளேன் தமிழனின் வாழ்வில் என்பது தான் பாரம்பரிய இலக்கியம்.

நானே வருவேன் திரைப்படத்திற்காக நானும் எக்சைட்மெண்டாக இருக்கிறேன் என் இரண்டு குழந்தைகளின் வாழ்க்கை அதில் உள்ளது அந்த படம் நல்லா வர வேண்டும் வெற்றி பெற வேண்டும் என்பதே எனக்கும் உள்ளது பெரிய படங்களாக இருந்தாலும் சிறிய படங்களாக இருந்தாலும் மூன்று நாட்கள் தான் அதன் படம் வெளி வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே ரிவ்யூ எழுத வேண்டும்..

தனுஷ் அவரது மனைவியும் மீண்டும் ஒன்று சேருவார்களா என கேட்டனர் அதற்கு பதில் அளித்த கஸ்தூரிராஜா இது எனக்கு சம்மந்தமில்லாத கேள்வி இதை கேட்க வேண்டாம் அநாகரிமான கேள்விகளை கேட்க வேண்டாம் சாரி. சிறிய பட்ஜெட் பெரிய பட்ஜெட் என்று இல்லை கண்டெண்ட் தான் முக்கியம் மீண்டும் படம் இயக்க உள்ளேன் எனக்கு சினிமா மட்டும் தான் தெரியும் தனுஷுக்கு கதை சொல்லும் அளவிற்கு எனக்கு சிந்திக்க தெரியவில்லை அவருக்காக யோசிக்க நிறைய பேர் உள்ளனர்..