Dhoni : இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சிஎஸ்கே அணியின் கேப்டன் ஆகிய மகேந்திர சிங் தோனி கிரிக்கெட்டையும் தாண்டி தற்பொழுது சினிமா படங்களை தயாரிக்கவும் முடிவெடுத்துள்ளார் முதலாவதாக எல் ஜி எம் என்ற படத்தை தயாரித்து உள்ளார். ரமேஷ் தமிழ்மணி படத்தை இயக்கிய உள்ளார்.
இந்த படத்தின் டிரைலர் அண்மையில் டீசர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்கிறார் அவருடன் இணைந்து லவ் டுடே பட நடிகை இவானா, நதியா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
எல் ஜி எம் படத்தின் இசை மற்றும் டிரைலர் விழாவில் மகேந்திர சிங் தோனி பேசியது சென்னை சூப்பர் கிங்சுக்கு விசில் அடிங்க.. டெஸ்ட் கிரிக்கெட் அறிமுகம்.. அதிகபட்ச ஸ்கோரும் சென்னையில் தான் கடந்த 2008ஆம் ஆண்டு ipl விளையாட வந்த போது சென்னை தன்னை தத்து எடுத்துக் கொண்டது.
எப்பொழுதும் தனது மனதில் சென்னைக்கு நீங்கா இடம் உள்ளது அதன் காரணமாக தங்களது பட தயாரிப்பை தமிழில் தொடங்கி உள்ளோம் எல் ஜி எம் படம் மிக குறைந்த நாட்களில் எடுக்கப்பட்டது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கவனம் இருந்தாலும் அடிக்கடி மனைவியுடன் படத்தைப் பற்றி விசாரித்துக் கொண்டேன் என தெரிவித்தார்.
சென்னை அணியில் தனக்கு இடம் கிடைக்குமா.? என யோகிபாபு கேள்வி எழுப்ப தோனி.. ராய்டு ஓய்வு பெற்று விட்டதால் சென்னை அணியில் உங்களுக்கு இடம் உண்டு எனவும் அணியின் நிர்வாகத்தினருடன் பேச தயார் ஆனால் அதற்கு தொடர் பயிற்சி செய்ய வேண்டும் என்று யோகி பாபு அறிவுரை வழங்கினார்.