2021ல் கல்லா கட்ட திட்டம் போட்ட தளபதி விஜய் நடக்குமா அவரது மாஸ்டர் பிளான்.!

vijay

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த படத்தின் டீஸர் தீபாவளி அன்று மாலை 6 மணி அளவில் ரசிகர்களுக்கு வெளியிடப்பட்டது. வெளிவந்த நாளில் இருந்தே யூடியூப்பில் அதிக பார்வையாளர்களை பார்க்க வைத்து தற்போது சாதனை படைத்து வருகிறது.

மேலும் தளபதி 65வது திரைப்படத்தை எந்த இயக்குனர் இயக்க போகிறார் என்று குழப்பத்தில் இருந்த ரசிகர்களுக்கு ஒரு அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்தது அது என்னவென்றால் தளபதி 65 ஆவது திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தான் இயக்கப் போகிறார் என்பதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெருவித்திருந்தது.

இதனை தொடர்ந்து தளபதி 65வது திரைப்படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல் வெளிவந்துள்ளது.

அதில் மாஸ்டர் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியிடப்படுவதாக தகவல் வந்திருந்த நிலையில் அதிகாரபூர்வமாக தகவல் வெளிவருமா என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் அடுத்த வருடத்தில் தளபதி 65 திரைப்படமும் மற்றும் மாஸ்டர் திரைப்படமும் வெளியாவதால் விஜய்க்கு அடுத்த வருடம் பாக்ஸ் ஆபிசில் மறக்க முடியாத ஆண்டாக அமையும் என்று சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

இந்த இரண்டு படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக வெளிவருமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

vijay
vijay