தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் தற்பொழுது வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் போஸ்ட் ப்ரோமோஷன் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நாளை இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
இப்படிப்பட்ட நிலையில் இந்த படத்தினை தொடர்ந்து தளபதி விஜய் தன்னுடைய 67ஆவது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு தளபதி 67 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்த படத்தை குறித்த ஏராளமான தகவல் வெளியாகி வருகிறது.
அந்த வகையில் இந்த படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் வில்லனாக நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தற்போது இந்த படத்தில் அர்ஜுன் கிங் வில்லனாக நடிப்பதற்கு எவ்வளவு சம்பளம் தரப்பட இருப்பதாக இது குறித்த தகவல் தற்பொழுது வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆம், அதாவது ஆக்ஷன் கிங் அர்ஜுன் வில்லனாக நடிக்க 5 கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இவரைத் தொடர்ந்து இந்த படத்தில் மற்றொரு வில்லனாக சஞ்சய் தத் நடிக்க இருக்கும் நிலையில் அவருக்கு ரூபாய் 10 கோடி சம்பளம் என்றும் அதேபோல் கௌதம் மேனன், நவீன் பாலி அவர்களுக்கும் கோடிக்கணக்கில் சம்பளம் கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. எனவே தளபதி 67 படத்தின் சம்பள பட்ஜெட் சுமார் 200 கோடியை தாண்டும் என சினிமா வட்டாரங்கள் கூறி வருகிறார்கள்.
மேலும் இதனை அடுத்து இந்தப் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, காஷ்மீர், லடாக் மற்றும் வெளிநாடு பகுதிகளில் நடத்தத் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு யோகேஷ் கனகராஜ் இந்த படத்தினை மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்க திட்டமிட்டு உள்ளார் என்பது தெரிய வருகிறது.