துணிவு பிரமோஷனில் அஜித் கலந்து கொல்வாரா?மாட்டாரா? .! குழப்பத்தில் ரசிகர்கள்…

ajith
ajith

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் அஜித் இவர் வலிமை திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்த நிலையில் மேலும் டப்பிங் வேலைகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து துணிவு படத்தின் கிராபிக்ஸ் பணிகளும் தொழில்நுட்ப பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் துணிவு திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அஜித்தின் துணிவும் விஜயின் வாரிசு திரைப்படமும் ஒரே நேரத்தில் மோத உள்ளதாக கூறப்படுகிறது.

துணிவு திரைப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனைத் தொடர்ந்து துணிவு படத்தில் இருந்து அண்மையில் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் செம்ம வைரல் ஆனது.

அதனை தொடர்ந்து அஜித்தின் துணிவு படத்தின் பிரமோஷன் பணிகள் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் அஜித் அவர்கள் கலந்து கொள்ள உள்ளதாக தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது. பிரமோஷன் நிகழ்ச்சிக்காக நடிகர் அஜித்குமார் இடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

அஜித் குமார் கிட்டத்தட்ட பல  வருடங்களாக எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளும் தன்னுடைய பட பிரமோஷன் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் துணிவு படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் அஜித்குமார் கலந்துகொண்டால் அதில் ஆச்சரியப்பட்டு தான் ஆக வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர் அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை இதனால் ரசிகர்கள் நடிகர் அஜித்குமார் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டார் எனர் கூறிய வருகின்றனர் ஆனால் அப்படி கலந்து கொண்டால் எங்களுக்கு மிகவும் சந்தோசம் தான் எனவும் கூறி வருகின்றனர்.