சினிமா உலகில் புதுமுக நடிகைகளின் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது அந்த வகையில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் இரண்டாவது மகள் அதிதி ஷங்கர் தமிழ் சினிமா உலகில் ஹீரோயினாக தற்பொழுது அறிமுகமாகியுள்ளார். அதிதி சங்கர் முதலில் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான விருமன்.
திரைப்படத்தில் நடித்தார் முதல் படத்திலேயே தனது நடிப்பு திறமை நடனம் போன்றவற்றில் மாஸ் காட்டினார் இதுவே ரசிகர்களுக்கு தற்பொழுது ரொம்ப பிடித்து போய் உள்ளது. முதல் படத்திலிருந்து தனக்கென ஒரு ரசிகர்கள் மன்றத்தையும் அவர் உருவாக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விருமன் படத்தின் வெற்றியை தொடர்ந்து மற்றொரு முன்னணி நடிகரான சிவகார்த்திகேயனுடன் அதிதி சங்கர்.
கைகோர்த்து நடித்துவரும் திரைப்படம் மாவீரன். இந்த படத்தில் இவர்களுடன் இணைந்து மிஷ்கின், சரிதா, யோகி பாபு மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர். மாவீரன் படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு புதிய லுக்கில் நடிக்கிறார் இந்த படத்தின் ஷூட்டிங் அண்மையில் நடந்தது.
தொடர்ந்து இந்த படத்தின் சூட்டிங் போய்க்கொண்டிருக்கிறது. ஏன் அண்மையில் கூட ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து நடிகை அதிதி ஷங்கர் புகைப்படத்தை வெளியிட்டு அசத்தினார். இப்படி இருக்கின்ற நிலையில் மாவீரன் திரைப்படத்தில் நடிகை அதிதி சங்கருக்கு எந்த மாதிரியான கதாபாத்திரம் என்பது குறித்தும் தற்பொழுது தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி பார்க்கையில் நடிகை அதிதி ஷங்கர் பத்திரிக்கை நிருபராக இந்த படத்தில் நடிப்பார் என சொல்லப்படுகிறது இதில் அதிதி சங்கரின் நடிப்பு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். ஆனால் மாவீரன் படக்குழு இந்த தகவலை இதுவரை அதிகாரபூர்வமாக சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.