தென்னிந்திய சினிமா உலகில் நம்பர் ஒன் ஹீரோயின்னாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இவர் சினிமா உலகில் இதுவரை வெற்றியை மட்டுமே கண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நிஜ வாழ்க்கையில் இவருக்கு பல ஏமாற்றங்களையும் தோல்வியையும் கொடுத்தது அதிலிருந்து மீண்டு வர விக்னேஷ் சிவன் தான் அவருக்கு உதவி செய்தார்.
இவர்கள் இருவரும் முதலில் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நல்ல நண்பர்களாக பழகிய பின் காதலர்களாக ஆறு வருடம் வாழ்ந்து கடந்த ஜூன் மாதம் அனைவரது முன்னிலை திருமணம் செய்து கொண்டனர் இப்பொழுது இருவரும் கணவன் மனைவிகளாக வாழ்ந்து வருகின்றனர். சினிமா உலகில் கிடைக்கின்ற வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி நடித்து முடித்துவிட்டு மீதி நேரங்களில் வெளிநாடு பறந்து விடுகின்றனர்.
அந்த வகையில் இப்பொழுது நயன்தாரா ஜவான் படத்தை முடித்து விட்டார் அதேபோல விக்னேஷ் சிவனும் செஸ் ஒலிம்பியா போட்டியை இயக்கினார் அதுவும் வெற்றிகரமாக முடிய இருவரும் தற்பொழுது ஸ்பெயின் நாட்டிற்கு பறந்து உள்ளனர் இருவரும் பத்து நாள் அங்கு தங்கி ரெஸ்ட் எடுப்பார்கள் எனது கூறப்பட்டது ஆனால் அங்கிருந்து வரும் புகைப்படங்களை வைத்து பார்த்தால் ரெஸ்ட் எடுப்பது போல தெரியலை ஏதோ ஒரு சின்ன ஹனிமூனுக்கு போய் இருக்கிற மாதிரி இருக்கு..
ஏனென்றால் இருவரும் ரொமான்டிக் மூடில் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் தான் வெளி வருகின்றனர் அதை பார்த்தாலே ரசிகர்களுக்கு சின்ன ஹனிமூன் எனத்தான் சொல்லி வருகின்றனர். ஆனால் விக்னேஷ் சிவன் அங்கேயும் ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிப்பதற்கான வேலையை பார்த்து உள்ளார்.
கல்யாணம் ஆகி விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கு சின்ன சின்ன பிரச்சனைகள் இருந்ததாக கூறப்பட்டது ஆனால் எப்படியோ நயன்தாராவை வெளிநாட்டு பக்கம் அழைத்துச் சென்று அவரை சமாதானப்படுத்தி உள்ளார். மேலும் அஜித்தின் 62 ஆவது படத்தை இயக்க இருக்கிறார் அதற்கு லொகேஷன் பார்த்த மாதிரியும் இருக்கும் என்பதனால் தான் திட்டமிட்டு இங்கு வந்ததாக கூறப்படுகிறது இதனால் ஒரே கல்லில் 2 மாங்காய் அடித்துள்ளார் விக்னேஷ் சிவன்.