விக்கி – நயன்தாரா கல்யாணத்திற்கு “ரஜினி” கொடுத்த பரிசு என்ன தெரியுமா.? ஆச்சர்யப்பட்டு போன ஜோடி.

rajini
rajini-

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா  சினிமா உலகில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்ககளில் நடித்து வந்தாலும் மீதி நேரங்களில் தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் பொழுதை கழித்து வந்த நிலையில் திடீரென இருவரும் ஒருவழியாக ஜூன் 9ஆம் தேதி உறவினர்கள் நண்பர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

ஒரு பக்கம் இவர்களது திருமணம் நடந்து கொண்டிருக்க மறுபக்கம் ஆதரவற்ற முதியவர்கள் குழந்தைகள் என ஒரு லட்சம் பேருக்கு சாப்பாடு கொடுத்து அழகு பார்த்தது இந்த ஜோடி. இவர்களது திருமணத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தாலி எடுத்துக் கொடுத்து அசத்தினார்.

விக்னேஷ் சிவன் நயன்தாரா கல்யாணத்திற்கு சூர்யா ஜோதிகா அஜித் குடும்பம் என பல பாலிவுட் மற்றும் தென் இந்திய பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமணத்திற்கு வந்த அனைவருக்கும் தாம்பூலப் பையில் வெள்ளி மற்றும் தங்க பொருட்களை வைத்து அசத்தியுள்ளனர்.

திருமணம் வெற்றிகரமாக முடிந்ததையடுத்து விக்கி நயன்தாரா இருவரும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து விட்டு வந்தனர் அதன் புகைப்படங்கள் கூட சமூக வலைதளப் பக்கத்தில் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்தது. இப்படி இருக்கின்ற நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் விக்கி கல்யாணத்திற்கு ரஜினிகாந்த.

தாலி எடுத்து கொடுத்ததோடு மட்டுமல்லாமல் மணமகள் சார்பாக மணமகளுக்கு ஸ்டார் ரஜினிகாந்த் சுமார் 30 சவரன் நகையை பரிசாக கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ரஜினி போல மற்ற டாப் நடிகர் நடிகைகளும் விக்கி நயன்தாரா கல்யாணத்திற்கு லட்சக்கணக்கான பரிசு பொருட்களை கொடுத்து அசத்தி உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.