AK 62 படத்திற்காக விக்கி – நயன்தாரா வாங்கயுள்ள சம்பளம் எவ்வளவு தெரியுமா.? புதிய உச்சத்தை தொட்ட அஜித்தின் சம்பளம்.

ajith
ajith

நடிகர் அஜித்குமார் வலிமை திரைப்படத்தை தொடர்ந்து ஹச். வினோத்துடன் மூன்றாவது முறையாக கைகோர்க்கும் தனது 61 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முதலில்  51 நாள் இரவு / பகல் பார்க்காமல் படப்பிடிப்பு முடிந்தது.

அதனைத் தொடர்ந்து இரண்டாவது கட்ட படப்பிடிப்பு தொடங்குவதற்கு சிறு கேப்பு இருந்ததால் உடனடியாக நடிகர் அஜித்குமார் ஐரோப்பிய நாடுகள் பக்கம் பிஎம்டபிள்யூ பைக் எடுத்துக்கொண்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன் புகைப்படங்கள் வெளிவந்து அசத்தின. இரண்டாவது கட்ட படப்பிடிப்பு வருகின்ற ஆகஸ்ட் மாதம் தான் தொடங்கும் என தெரிய வருகிறது.

இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் அஜித் மற்றும் மலையாள நடிகை மஞ்சு வாரியரின் கதாபாத்திரங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் படப்பிடிப்பு முடியும் என தெரியவருகிறது. இது இப்படி இருக்க மறுபக்கமும் நடிகர் அஜித்குமார் தனது 62 வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தை நயன்தாராவின் காதலன் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார்.

இவர் முதல் முறையாக அஜித்துடன் கைகோர்க்க உள்ளார் இந்த படத்தை மிக பிரம்மாண்ட பொருள் செலவில் லைக்கா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. AK 62 படத்திற்காக நடிகர் அஜித்குமார் சுமார் 105 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது அதில் 30 கோடி அட்வான்ஸாக கொடுக்கப்பட்டுள்ளதாம். AK 62 இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார்.

அவருக்கு சம்பளமாக 10 கோடி கொடுக்கப்படுகிறதாம், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு 11 கோடி இசையமைப்பாளர், அனிருத்துக்கு 5 கோடி கொடுக்க உள்ளது இதற்கிடையில் இந்த திரைப்படம் வருகின்ற நவம்பர் மாதம் படப்பிடிப்பை தொடங்கலாம் என தெரியவருகிறது. தற்பொழுது இயக்குனர் விக்னேஷ் சிவனும், அஜித்தும் படத்தின் கதை குறித்து பேசி வருகின்றனர் அதில் சில மாற்றங்களை அஜித் செய்ய செய்துள்ளார்.