ஆசை ஆசையாய் கேட்ட மனைவி சங்கீதா.. மறுக்க முடியாமல் “விஜய்” நடித்த திரைப்படம்.!

Vijay
Vijay

Vijay : தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக வருபவர் தளபதி விஜய். வாரிசு படத்தை தொடர்ந்து செவென் க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிப்பில் லோகேஷ் இயக்கத்தில்  உருவாகியுள்ள “லியோ” படத்தில் வெற்றிகரமாக நடித்துள்ளார் படத்தின் ப்ரோமோஷனல் தீவிரமாகப் போய்க் கொண்டிருக்கிறது. வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக இருக்கிறது.

லியோ படத்தில் விஜயுடன் இணைந்து சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான், த்ரிஷா என மிகப் பெரிய பட்டாளமே நடித்துள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.  விஜய் அடுத்து ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகயுள்ள “தளபதி 68” படத்தில் நடிக்க உள்ளார் இந்த படத்தில் நடிக்க விஜய் 150 கோடிக்கு மேல் சம்பளம் வாங்க இருப்பதாக கூறப்படுகிறது.

சீதா எடுத்த முடிவால் மீனாவின் வாழ்க்கை கேள்விக்குறியாகுமா.? பரபரப்பான கட்டத்தில் சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

தளபதி 68 படம் முழுக்க முழுக்க என்டர்டைன்மெண்ட் திரைப்படமாக உருவாகும் என கூறப்படுகிறது. சினிமாவில் படும் பிஸியாக ஓடும் விஜய் மறுபக்கம் தனது மக்கள் இயக்கத்தை அரசியலாக மாற்றுவதற்கான வேலைகளை படும் தீவிரமாக பார்த்து வருகிறார். தளபதி 68 படத்திற்கு பிறகு அவர் அரசியல் களம் காண்பது உறுதியான பலரும் கூறி வருகின்றனர்.

ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை இந்த நிலையில் தனது மனைவி சங்கீதாவுக்காக விஜய் நடித்த திரைப்படம் குறித்து பார்ப்போம் ஏ.எல். விஜய் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான தெய்வத்திருமகள் படம் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

செழியனை பார்க்க மீண்டும் வீட்டிற்கே வந்த மாலினி.. பார்க்கக்கூடாததைப் பார்த்து கேட்க கூடாததை கேட்டு நொந்து போன பாக்கியா – பாக்கியலட்சுமி

இதை பார்த்த சங்கீதா ஏ எல் விஜய் இயக்கத்தில் விஜய் நடிக்க வேண்டும் என ஆசையை தெரிவித்துள்ளார். விஜயும் ஏ.எல். விஜயை சந்தித்து ஏதாவது கதை இருக்கா என கேட்க “தலைவா” படத்தின் கதை இருக்கு என சொல்லவே அதில் நடித்தாராம். இதைப் பார்த்த ரசிகர்கள் மனைவி மீது அவ்வளவு பாசமா.. எனக் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.