நீ டைம் பாஸ்க்கு தான் லக்கி.. சிவகார்த்திகேயனை திருமணம் செய்தது குறித்து பேசிய மனைவி ஆர்த்தி.!

Sivakarthikeyan
Sivakarthikeyan

Sivakarthikeyan : தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரில் கலந்து கொண்டு காமெடி பண்ணினார். பின் தொகுப்பாளராக திறன் பட செயல்பட்டு தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை கவர்ந்து இழுத்தார்.

இப்படி ஓடிக்கொண்டிருந்த சிவகார்த்திகேயன் மெரினா படத்தின் மூலம் வெள்ளி திரைக்கு என்ட்ரி கொடுத்தார். அதனை தொடர்ந்து தனுஷ் உடன் நட்பு ஏற்பட இருவரும் இணைந்து 3 படத்தில் நடித்தனர், தனுஷ் தயாரித்த எதிர்நீச்சல் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்தார். அந்த படம் பெரிய ஹிட் அடித்தது. மனம் கொத்தி பறவை, மான் கராத்தே..

இந்த மாசம் பணம் தருவீங்களா இல்ல ஓசியிலேயே சாப்பிடுவீங்களா.. மீனாவை வம்புக்கு இழுத்த விஜயா – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

காக்கி சட்டை, ரெமோ போன்ற பல வெற்றி படங்களை கொடுத்து தனக்கென ஒரு நிரந்தர இடத்தை தக்க வைத்துக் கொண்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் சிவகார்த்திகேயனை பற்றி இமான் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது அவர் சொன்னது என்னவென்றால்..  எனக்கு பெரிய துரோகத்தை செய்து விட்டார் இனி என் வாழ்நாளில் அவருடன் இணைந்து படம் பண்ண மாட்டேன் என்று ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

அது சமூக வலை தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது.. ஆனால் இது குறித்து சிவகார்த்திகேயன் தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை.. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் அவரது மாமன் மகள் ஆர்த்தியை தான் திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் ஒரு மகள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர்.

எதிரிகள் இல்லன்னா வாழ்க்கை போரடிச்சிடும்.. லியோ படம் செய்த 10 சாதனைகள் – அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம்

இருவருக்கும் கல்யாணமான புதுசில் சிவகார்த்திகேயன் ஆர்த்தியிடம் ஒரு இன்டர்வியு எடுத்து இருக்கிறார்.. அதில் நீங்கள் எதற்காக என்னை கல்யாணம் பண்ணீங்க என்று கேட்க..  உங்கள கல்யாணம் பண்ணா நல்லா டைம் பாஸ் ஆகும் என கூறினார். சிவகார்த்திகேயன் பாத்திங்களா டைம் பாஸுக்காக கல்யாணம் பண்ணி இருக்காங்க என கிண்டல் அடித்த இன்டர்வியூ வீடியோ தற்பொழுது வைரலாகி வருகின்றன..