கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் பிரசாந்த் நில் இயக்கத்தில் வெளியாகி திரைப்படம் தான் கேஜிஎப் இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று மிகப்பெரிய வெற்றிபெற்றது மட்டுமில்லாமல் இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. அதனால் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு படக்குழு முடிவு செய்தது.
இந்தநிலையில் கடந்த இரண்டு வருடங்களாக கேஜிஎப் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பை கர்நாடகாவில் நடைபெற்று வந்தது. கன்னடத்தில் நடிகராக வலம் வந்த யாஷ் தற்போது இந்திய அளவில் பேசப்படும் நடிகராக உயர்ந்து நிற்கிறார் அதற்கு காரணம் கேஜிஎப் திரைப்படம் தான். இந்தநிலையில் கேஜிபி இரண்டாவது பாகம் தற்பொழுது வெளியாகி ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
மேலும் படத்தை பார்த்த ரசிகர்களும் விமர்சகர்களும் படம் பிரமாதம் எனவும் பக்கா ஆக்ஷன் படம் எனவும் படம் ஆகா ஓகோ என இருப்பதாக புகழ்ந்து தள்ளுகிறார்கள். இந்த இரண்டாவது பாகத்தில் யாஷ் ஆக்சன் காட்சிகளும் மாசான டயலாக்குகளும் திரைப்படத்தின் வெற்றிக்கு கூடுதல் பலம் என்றே கூறலாம் அதேபோல் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த சஞ்சய் தத் தனது நடிப்பில் மிரட்டியுள்ளார்.
இந்த திரைப்படத்தில் நடித்த ரவீனா, ஸ்ரீநிதி செட்டி, அர்ச்சனா ஜாஸ் இவர்கள் தங்களுடைய கதாபாத்திரத்தை ஏற்று பிரமாதமாக நடித்துள்ளார்கள். இப்படி நடிகர் நடிகை பற்றி பேசினாலும் இதில் ஒருசில கதாபாத்திரம் எதற்காக வைத்தார்கள் என கேள்வி கேட்க வைத்துள்ளது. அதில் முக்கிய கதாபாத்திரமாக பேசப்படுவது பிரகாஷ்ராஜின் கதாபாத்திரம்தான் ஏனென்றால் அந்த கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவரவில்லை. கே ஜி எஃப் திரைப்படத்தில் கதை சொல்லும் கதாபாத்திரத்தில் நடிகர் அனந்த் நாக் நடித்திருப்பார் முதல் பாகத்தில் உட்கார்ந்த இடத்திலேயே தன்னுடைய நடிப்பால் கேஜிஎப் திரைப்படத்தை பார்க்க வைத்து விடுவார் அந்த அளவு அவர் கதை சொல்வார்.
அதே போல் தமிழில் டப்பிங் பேசியது நிழல்கள் ரவி அந்தக் குரலுக்கு சொந்தக்காரர் நிழல்கள் ரவி கம்பீரமான குரலை முதல் பக்கத்தில் வைத்து விட்டு இரண்டாவது பக்கத்தில் படக்குழு எதற்காக அவரின் குரலை வைக்கவில்லை என்று தெரியவில்லை அதேபோல் அனந்த் நாக் கதாபாத்திரத்தில் பிரகாஷ் ராஜ் நடித்துள்ளார் இருந்தாலும் பிரகாஷ்ராஜ் குரல் நிழல்கள் ரவி குரல் அளவிற்கு எடுபடவில்லை. என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
பிரகாஷ்ராஜ் கதாபாத்திரத்தில் அனந்த்நாக் நடித்திருந்தால் இன்னும் பிரமாதமாக இருந்திருக்கும் எனக் கூறப்படுகிறது அதேபோல் இந்த திரைப்படத்தில் ஜான் கொக்கேன் கதாபாத்திரம் எதற்காக வைத்தார்கள் என்றே தெரியவில்லை அந்த அளவு அவருக்கு பெரிதாக காட்சிகள் இல்லை. மேலும் கேஜிஎப் இரண்டாம் பாகத்தின் மூலம் யாஷ் மற்றும் பிரசாந்த் நீல் மீண்டும் தங்களுடைய திறமையை நிரூபித்து உள்ளார்கள் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்திய அளவில் இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி அடையும் என பலரும் கூறி வருகிறார்கள் அதுமட்டுமில்லாமல் வசூலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும் கூறுகிறார்கள்.