சின்னத்திரை நடிகை மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்தர் இருவருக்கும் சமீபத்தில் இரண்டாவது திருமணம் நடைபெற்றுள்ள நிலையில் இவர்களைப் பற்றி பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள். மகாலட்சுமிக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் இருக்கும் நிலையில் இரண்டாவதாக தயாரிப்பாளர் ரவீந்தரை கடந்த ஒன்றாம் தேதி அன்று திருப்பதியில் பெற்றோர்கள் சமதத்துடன் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.
இவ்வாறு இவர்களுக்கு திருமணமாகி 11 நாட்களாகும் நிலையில் தற்பொழுது வரையிலும் சமூக வலைத்தளங்களின் இவர்களுடைய திருமணம் குறித்த தகவல்கள் தான் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மகாலட்சுமி, ரவீந்தர் இருவரும் தொடர்ந்து யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் நடிகை வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு பீட்டர் பாலையும் மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.
இதனை ரவீந்தர் விமர்சனம் செய்திருந்தார் இப்படிப்பட்ட நிலையில் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவரும் திருமணம் முடிந்துள்ள நிலையில் இதனைப் பற்றி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வனிதா கர்மா ஒரு B****H என பதிவிட்டிருந்தார். இதற்கு ரவீந்தர் அவளுக்கு எப்படி திரும்பி கொடுக்க வேண்டும் என்பதும் தெரியும். நான் அவளை முழுமையாக நம்புகிறேன் என்றும் பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் மகாலட்சுமி மிகவும் சோகமாக இருப்பதாக தெரிகிறது மேலும் ரவீந்தர் இன்ஸ்டாகிராம் லைவில் பேசிய பொழுது நான் அவருடைய ட்விட்டர் பதிவை படித்தேன் கர்மா இ எஸ் மை என ஏதோ எழுதி இருந்தார். அது என் வாயில் கூட நுழையவில்லை அதைப்பற்றி பேச எதுவும் இல்லை என்னுடைய வாழ்க்கை யாருடைய கண்ணீரிலும் தொடங்கவில்லை என பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும் தற்பொழுது ரவீந்தர், மகாலட்சுமி தனி ஹெலிகாப்டரில் தேனிலவு சென்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது குறித்த புகைப்படங்கள், வீடியோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் மகாலட்சுமி வெளியிட்டு இருந்தார்.