தமிழ் சினிமா உலகில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் எப்படிப்பட்ட கதையாக இருந்தாலும் அதில் நடித்து தனது திறமையை காட்டி ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருபவர் உலக நாயகன் கமலஹாசன். இவர் போடாத கெட்ட பெயர் கிடையாது என கூறப்படுகிறது இவர் இதுவரை 232 படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுமார் 4 வருடங்களுக்கு பிறகு நடிகர் கமலஹாசன் லோகேஷ் கனகராஜ் சொன்ன கதையில் நடிக்கிறார் அந்த படத்திற்கு தற்போது விக்ரம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது இந்த படம் வருகின்ற ஜூன் மூன்றாம் தேதி உலக அளவில் வெளியாக இருக்கிறது இந்தப்படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் படம் என்பதால் கமலுக்கு நிகராக நடிப்பில் மிரட்டக்கூடிய பகத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா மற்றும் பல டாப் நட்சத்திர பட்டாளங்களை உள்ளிழுத்து விட்டுள்ளார்.
இந்த படமும் தற்போது சிறப்பாக வந்துள்ளது அதேசமயம் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களும் வேற லெவலில் இருக்கின்றன குறிப்பாக பத்தல பத்தல பாடல் தற்போது ரசிகர்கள் மனதில் குடியேறி இருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு கமல் நடித்துள்ளதால் விக்ரம் படத்தை பார்க்க தற்பொழுது ரசிகர்கள் வேறு அளவுகளில் எதிர்நோக்குகின்றனர்.
இப்படி இருக்கின்ற நிலையில் விக்ரம் படத்தில் ஏன் சூர்யா நடித்தார் என்பது குறித்து தற்போது தகவல்கள் கிடைத்துள்ளது அதாவது விக்ரம் படத்தில் ஒரு முக்கிய காட்சியில் சூர்யா நடித்தால் சிறப்பாக இருக்கும் என கமல் கருதியதை அடுத்து அவர் சூர்யாவிடம் பேசி உள்ளார் சூர்யாவும் உடனே எந்த மறுப்பும் தெரிவிக்காமல் கமல் கூப்பிட்ட உடனேயே வந்து படத்தில் நடித்து கொடுத்தாராம்.
இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது தமிழ் சினிமாவில் பல நடிகர்களுக்கு குருவாக இருப்பவர் நடிகர் கமல் அந்தவகையில் நடிகர் சூர்யாவும் கமலை குருவாக தான் நினைத்து வருகிறாராம். அதனால் கமல் கூப்பிட்ட உடனேயே வந்ததாகவும் ஒரு தகவல்கள் வெளிவருகின்றன.
இதேபோல்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு கமல் நடிப்பில் வெளியான மன்மதன் அம்பு படத்தில் கூட கமல் கேட்டுக்கொண்டதற்கு இணங்க சூர்யா வந்து ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.