“RRR” பட ஹீரோக்கள் வெற்றிமாறன் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டுவது ஏன்.. பேட்டியில் அவர்களே சொன்ன பதில்..

RRR
RRR

எஸ் எஸ் ராஜமௌலி பாகுபலி படத்திற்கு முன்பாக பல சிறந்த படைப்புகளை கொடுத்து இருந்தாலும் அந்த படைப்புகள் மிகப் பெரிய அளவில் பேசப்படவில்லை ஆனால் பிரமாண்ட பட்ஜெட்டில் பிரபாஸை வைத்து பாகுபலி என்னும் படத்தை எடுத்திருந்தார் இந்த படம்  இந்திய அளவில் பேசப்பட்டது.

காரணம் பட்ஜெட்டுக்கு ஏற்ற மாதிரி  படத்தின் கதை களத்தை புதிய தொழில்நுட்பங்களை கிராபிக்ஸ் அதிகம் பயன்படுத்தி வேற லெவலில் எடுத்து இருந்ததால் படத்தில் ஒவ்வொரு சீனும் ரசிக்கும்படி இருந்தது. மேலும் படத்தை பார்த்து ரசிகர்கள் கொண்டாடினர். இதனால் இந்தப் படம் மிகப் பெரிய அளவில் வெற்றியை பெற்றது.

முதல் படத்தைப்போலவே இரண்டாவது படமும் மிக பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது இந்த படம் முதல் படத்தை விட அதிக கோடிகளை அள்ளி புதிய சாதனை படைத்தது. சிறு இடைவெளிக்குப் பிறகு இயக்குனர் ராஜமௌலி தெலுங்கு நடிகர்கள் ஜூனியர் என்டிஆர், ராம்சரணை வைத்து RRR என்னும் திரைப்படத்தை எடுத்திருந்தார். இந்த படத்தின் ஷூட்டிங் 2018ல் ஆரம்பிக்கப்பட்டு இருந்தாலும்..

பல்வேறு தடைகளை சந்தித்ததால் ஒருவழியாக பல வருடங்கள் கழித்து  கடந்த மாதம் 24ஆம் தேதி கோலாகலமாக வெறியாகியது. ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே RRR படத்தில் ஆக்சன் செண்டிமெண்ட் சீன்கள் ஒவ்வொன்றும் மிரள வைக்கும் வகையில் இருந்ததால்  சிறுவர்களுக்கு ரொம்ப பிடித்துப் போனது இதனால் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அடித்து நொறுக்கி வருகிறது.

இதுவரை 800 கோடிக்கு மேல்  RRR வசூல் அள்ளி உள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன இப்படி இருக்கின்ற நிலையில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் பல்வேறு பேட்டிகள் கொடுத்து வருகின்றனர் அப்படி ஒரு தடவை பேட்டியின் போது தமிழ் சினிமா உலகில் எந்த இயக்குனர் படத்தில் நடிக்க ரொம்ப ஆசை படுகிறார்கள் என கேட்டுள்ளனர் அதற்கு வெற்றி மாறன் என கூறியுள்ளனர்.

காரணம் வெற்றிமாறன் எப்போதும் வித்தியாசமான படங்களை கொடுக்க கூடியவர் அதேசமயம் அவரது கதைக்களமும் வேற மாதிரி இருக்கும். அந்த காரணத்தினால் தான் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க ரொம்ப ஆசை என கூறி உள்ளனர்.