வடக்கு, மேற்கு திசையில் ஏன் தலை வைத்து படுக்கக் கூடாது தெரியுமா.?

best sleeping
best sleeping

மனிதனாக பிறந்தால் மட்டுமல்ல உயிரினமாக இருந்தாலே உறக்கம் என்பது மிகவும் அவசியம் ஒரு நாளைக்கு சராசரியாக 8 மணி நேரம் தூங்குவது மிகவும் நல்லது அப்படி தூங்கும்பொழுது எந்த திசையில் தலை வைத்து படுக்கலாம்.. எந்த திசையில் தலை வைத்து படுக்கக் கூடாது.. எப்படி தூங்க வேண்டும்.. எப்படி தூங்க கூடாது.. என்பதை இங்கே காணலாம்.

கிழக்கு திசையில் தலை வைத்து தூங்குவது மிகவும் உடலுக்கு ஆரோக்கியம், அதுவே தெற்கு திசையில் தலை வைத்து படுத்தால் ஆயுள் வளரும் என கூறுகிறார்கள். அப்படி இருக்கும் நிலையில் ஏன் மேற்கு மற்றும் வடக்கு திசையில் தலை வைத்து தூங்கக்கூடாது என்பதற்கான காரணம் இதோ.

மேற்கு திசையில் தலை வைத்து படுத்தால் கனவு அதிர்ச்சி ஆகியவை உண்டாகும். அதேபோல் வடக்கு திசையில் தலை வைத்து அறவே படுக்கக் கூடாது அதற்கு காரணம் அறிவியல் பூர்வமாக சான்றுகள் இருக்கின்றன. வடக்கிலிருந்து வரும் காந்த சக்தி தலையில் மோதும் பொழுது அங்குள்ள பிராண சக்தியை இழுக்கும் இதனால் இதய கோளாறு நரம்பு தளர்ச்சி உண்டாகும் என கூறுகிறார்கள் அது மட்டும் இல்லாமல் நமது மூளை சீக்கிரம் பாதிப்படையும்.

எப்படி தூங்கினால் நல்லது.. எப்படி தூங்க கூடாது.. என்பது இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

மல்லாந்து படுத்துக்கொண்டு கால்களையும் கைகளையும் அகல நீட்டி தூங்கவே கூடாது அப்படி தூங்கும் பொழுது அவர்களுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் குறட்டை உண்டாகும், அதேபோல் குப்பரவும் படுக்கக் கூடாது.

நமது இடது கை கீழே வைத்தும் வலது கை மேலோங்கி இருப்பது போல் தூங்க வேண்டும், இடது புறமாக கழுத்தை வைத்து தூங்க வேண்டும். இவ்வாறு தூங்கும் பொழுது வலது மூக்கில் சுவாசம் சூரிய கலையில் ஓடும் அதனால் வெறும் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம் வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என கூறப்படுகிறது.

அது மட்டும் இல்லாமல் உடலுக்கு தேவையான வெப்பம் காற்று அதிகரித்து சாப்பிட்ட உணவுப் பொருள்கள் மிக எளிதாக செரிமானம் அடையும் இதயத்திற்கு சீரான ஆக்சிஜன் கிடைத்து இதயம் நன்றாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

அதுவே வலது புறம் படுப்பதால் இடது மூக்கு வழியாக சந்திர கலை சுவாசம் ஓடும் இதனால் 12 அங்குள்ள சுவாசம் வெளியே சென்று விடும் இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகாது என கூறுகிறார்கள்.