Nayanthara : தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஜவான் படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இறைவன் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றி நடை கண்டு வருகிறது அடுத்ததாக நயன்தாரா 75, டெஸ்ட் ஆகிய படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.
சினிமாவில் படும் பிசியாக இருக்கும் நயன்தாரா தற்பொழுது பிசினஸ்களிலும் தலை காட்ட ஆரம்பித்துள்ளார் ஏற்கனவே பல பிசினஸ்கள் செய்து வரும் நயன்தாரா தற்பொழுது 9 skin என்ற நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார் நேற்று மலேசியாவில் பிரம்மாண்டமாக நடந்தது.
அதில் விக்னேஷ் சிவன், நயன்தாரா கலந்து கொண்டனர் அப்பொழுது நயன்தாரா ஏன் படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை என்பது குறித்து விக்னேஷ் சிவன் பேசியிருந்தார். நயன்தாராவுக்கு ஒரு விஷயம் சரி என தோன்றினால் மட்டுமே அதை பிரமோஷன் செய்வார் நிறைய நேரங்களில் அவர் நடித்த படங்களை அவர் புரோமோட் செய்யாமல் இருந்திருக்கிறார்.
அது ஒரு படம் அதுவாக புரமோட் செய்து கொள்ளும் என்ற அர்த்தத்தில் இல்லை ஒரு நல்ல விஷயம் எதுவாக இருந்தாலும் அதுவே தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளும் அதுதான் அவருடைய உள் நம்பிக்கை ஆரம்ப காலகட்டத்தில் அவர் ஒரு பிராண்ட் அம்பாசிடராக வருவார் .
அதைப்பற்றி பேசுவார் சில புகைப்படங்கள் எடுப்பார் என நினைத்தேன் ஆனால் அது நடக்கவில்லை பொருளின் டிசைன், பாட்டில் எழுத்தின் வடிவம், பேக்கேஜ் என முழுவதையும் கவனித்துக் கொண்டார் அதற்காக நிறைய மனக்கடல் மேற்கொண்டார் அதை எல்லாம் பார்க்கும் பொழுது எங்களுக்கு மிகவும் உத்வேகமாக இருந்தது என்றார்.