சிம்பு நடிக்கும் படத்திற்கு மட்டும் ஏன் அதிக பிரச்சனை – உண்மையை உடைத்தெறிந்த பயில்வான் ரங்கநாதன்.

simbu-and-pailwan
simbu-and-pailwan

தமிழ் சினிமாவில் இளம் வயதில் இருந்து தற்பொழுது வரையிலும் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி உள்ளவர் நடிகர் சிம்பு மேலும் நடிப்பு என்ற அந்தஸ்தையும் தாண்டி சினிமாவில் பாடகராகவும், இயக்குனராகவும், இசையமைப்பாளராகவும் தன்னை வளர்த்துக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் அவை அனைத்தும் நடிகர் சிம்பு நல்ல வரவேற்ப்பை கொடுத்தாலும் நடிகர் என்பதில் மட்டும் சிறிது கோட்டை விட்டார் என்று சொல்ல வேண்டும் ஏனென்றால் ஆரம்பத்தில் சிறப்பான ஹிட் படங்களை கொடுத்து வந்த இவர் வெகு விரைவிலேயே உச்ச நட்சத்திரமாக விஸ்வரூபம் எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் குடும்பப் பிரச்சினைகள் காரணமாக சிறிது காலம் சினிமா உலகில் நடிக்காமல் இருந்தார. மேலும் அவர் நடித்த பல்வேறு திரைப்படங்கள் அப்படியே பாதியிலேயே கிடப்பில் கடந்தன. இதை ஒரு கட்டத்தில் உணர்ந்து கொண்ட நடிகர் சிம்பு தன்னை முற்றிலுமாக மாற்றி கொண்டு தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த திரைப்படம் வெற்றி திரையரங்கில் வெளியானது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் அண்மையில் பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்று கொடுத்தார் அப்போது சிம்புவுக்கு இருக்கும் பிரச்சனைகளை பல்வேறு எடுத்து அடுக்கி வைத்தார். அதனால் தான் சிம்பு நடிக்கும் படங்களில் பல்வேறு பிரச்சனைகள் நிகழ்கின்றன. அதன் காரணமாக தயாரிப்பாளர்கள் படாத பாடுபடுகின்றனர். சிம்புவுக்கும் – தயாரிப்பாளர் சங்கத்துக்கும் நாசுக்காக  சண்டை.

அதனால் சிம்பு பட தயாரிப்பாளர்கள் படத்தை முடிக்கவே படாதபாடு படுவார்கள் அதில் சிம்பு பிரச்சனை இணைந்வதால் தயாரிப்பாளர் மண்டையை பிச்சி கொள்கின்றனர். ஆனால் நான் தயாரிக்கும் படத்தில் கூட வேண்டாம் நான் ஒரு தயாரிப்பாளரை காட்டுகிறேன் அந்த படத்தில் அவர் நடித்தால் போதும் எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது படம் சூப்பராக சொன்ன தேதியில் ரிலீஸாகும் என சொன்னார். இச்செய்தி தற்பொழுது  பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.