துணிவு திரைப்படத்தின் அடுத்த பாடல் வெளியாவதில் தாமதம் ஏன்.? கேட்ட நீங்களே ஷாக்காகிடுவிங்க…

thunivu
thunivu

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் அஜித் இவர் தற்போது ஹெச் வினோத் கூட்டணியில் மூன்றாவது திரைப்படமான துணிவு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதை தொடர்ந்து இந்த திரைப்படம் வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாக உள்ளதை பட குழு ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில் துணிவு திரைப்படத்திற்காக போஸ்ட், புரொடக்ஷன் பணிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் துணிவு திரைப்படத்திலிருந்து சமிபத்தில் வெளியான சில்லா சில்லா என தொடங்கும் ஒரு பாடலை படக்குழு வெளியிட்டு இருந்தது.

ஜிப்ரான் இசையில் அனிருத் பாடியுள்ள இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் வெளியான மூன்று நாட்களிலேயே 15 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்த நிலையில் துணிவு திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் அவர்கள் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் “காசேதான் கடவுளடா” என்று தொடங்கும் ஒரு பாடல் துணிவு திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளதாக பதிவு செய்திருக்கிறார்.

இதனால் ரசிகர் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதுமட்டுமல்லாமல் சில்லா சில்லா பாடலை விட அடுத்த பாடல் மரண குத்து பாடலாக இருக்கும் என ஏற்கனவே தகவல் கிடைத்திருக்கிறது. இந்த நிலையில் அடுத்த பாடல் காசேதான் கடவுளடா எனத் தொடங்கும் வரிகளில் இருக்க உள்ளதாக ஜிப்ரான் அவர்கள் நேற்று அறிவித்திருந்தார்.

ஆனால் இந்த பாடல் எப்போது வெளியாகும் என ஜிப்ரான் அறிவிக்கவில்லை. ஆகையால் இந்த பாடல் எப்போது வெளியாகும் என்று தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது அதாவது காசேதான் கடவுளடா என தொடங்கும் இந்த பாடலின் லிரிக்கள் வீடியோ தற்போது ரெடியாகி கொண்டிருக்கிறது என்றும் அந்த வீடியோ முடிந்த உடன் இந்தப் பாடலின் வெளியிட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக  அறிவிக்கும் எனவும் தகவல் கிடைத்துள்ளது.