நடிகர் சூர்யா கடைசியாக நடித்த ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது அதைத் தொடர்ந்து பாலாவுடன் கைகோர்த்து வணங்கான் திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வந்தார் ஆனால் பாலாவுக்கும், சூர்யாவுக்கும் இடையே தொடர்ந்து பிரச்சனைகள் எழ ஒருகட்டத்தில் அது விஸ்வரூபமாக வெடித்து படத்தையே இழுத்து மூடியது.
இதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாமல் சூர்யா அடுத்ததாக சிறுத்தை சிவா உடன் கூட்டணி அமைத்து தனது 42 வது திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த படம் சங்க காலத்து படமாக உருவாகி வருகிறதாம். மேலும் இதில் சூர்யா பல கெட்டப்புகளில் நடித்துப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படி சூர்யா அடுத்தடுத்த படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் எதிர்பார்ப்பது வாடிவாசல் திரைப்படம் எப்பொழுது உருவாகிறது என்பது தான்.. தற்பொழுது கிடைக்கின்ற தகவல் என்னவென்றால் சூர்யா ரெடியாக இருந்தாலும் வெற்றி மாறன் ரெடியாக இல்லை என சொல்லப்படுகிறது காரணம் வெற்றிமாறன் விடுதலை படத்தை எடுக்கவே பல நாட்கள் எடுத்துக் கொண்டார்.
அதைத் தொடர்ந்து இரண்டு டாப் நடிகர்களை வைத்து வெற்றிமாறன் ஒரு படம் இயக்கப் போவதாக கூறப்படுகிறது. அதை முடித்துவிட்டு உலக நாயகன் கமலஹாசன் உடன் கைகோர்த்து ஒரு படம் பண்ண இருக்கிறார். அந்த படத்தை கமலின் ராஜ் கமல் ஃபிலிம் நிறுவனம் மிக பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரிக்க இருக்கிறது என தகவல் வெளியாகி உள்ளது.
இப்படி அடுத்த அடுத்த படங்களில் வெற்றிமாறன் கமிட்டாகி உள்ளதால் வாடிவாசல் உருவாகுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது இதனால் ரசிகர்கள் வாடிவாசலுக்கு முழுக்கு போட்டு விட்டீர்களா என கேட்டு வருகின்றனர் ஆனால் பட குழு மற்றும் தயாரிப்பு நிறுவனம் சைடுல இருந்து வெளிவரும் தகவல் என்னவென்றால் நிச்சயம் வாடிவாசல் உருவாகும் என சொல்லி வருகிறது.