அஜித்தை ஏன் எல்லோருக்கும் பிடிக்கிறது.! மனம் திறந்த காதல் மன்னன் பட நடிகை…

ajith
ajith

பொதுவாக பல சினிமா பிரபலங்களிடம் அஜித்தை பற்றி கேட்கும்போது அவர் எளிமையான ஒரு நடிகர் மரியாதை கொடுக்க தெரிந்தவர் இதனால்தான் எல்லோருக்கும் பிடிக்கும் என்று பல காரணங்கள் கூறி வருகிறார்கள் அப்படி பிரபல நடிகை ஒருவர் அஜித்தை பற்றி பல சுவாரசியமான தகவல்களை கூறியிருக்கிறார் இவருடைய இந்த வீடியோ தற்போது இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது.

1998 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான காதல் மன்னன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது இந்த திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து மானு, விவேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் துன்பம், காதல், ஆக்சன், என அனைத்துமே இடம்பெற்று இருக்கும்.

இதை தொடர்ந்து காதல் மன்னன் திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இந்த படத்தில் நடித்த நடிகை மானு அவர்களை ஒரு ஊடகம் பேட்டி அளித்து இருக்கிறது. அப்போது படப்பிடிப்பில் நடந்த பல சுவாரஸ்யமான விஷயங்களையும் அஜித்தை பற்றி பல விஷயங்களை கூறியிருக்கிறார்.

அதாவது தமிழில் காதல் மன்னன் திரைப்படம் எனக்கு முதல் திரைப்படம் என்பதால் தன்னை இந்த படத்தில் நடிக்க பயப்படாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் படபிடிப்பு தளத்தில் முழுக்க முழுக்க நான் அஜித்தின் அப்பா அம்மாவுடன் தான் இருப்பேன் என்று கூறியிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் அஜித் சார் இந்த படபிடிப்பை தொடங்கியதில் இருந்து முடியும் வரை ஒரு குறை கூட சொல்லாத அளவிற்கு என்னை பார்த்துக் கொண்டார் என்று கூறிய நெகிழ்ச்சியாகி உள்ளார். மேலும் இவர் கூறிய இந்த வீடியோ தற்போது இணையத்தில் செம்ம டிரண்டாகி வருகிறது.

காதல் மன்னன் திரைப்படத்தை தொடர்ந்து நடிகை மானு மேலும் ஒரு தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு எந்த ஒரு திரைப்படத்திலும் நடிகை மானு நடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.