வித்தியாசமான கெட்டப்புகளில் “விஜய்” நடிக்க மறுப்பது ஏன்.? அவரே கூறிய பதில்.

vijay
vijay

நடிகர் விஜய் சினிமாவில் தனது இளம் வயதிலேயே ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பைப் பெற்று ஆரம்பத்தில் காதல் கலந்த படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார். பின்பு ஒரு கட்டத்தில் ஆக்சன் படங்களை தேர்வு செய்து செம மாசான லுக்கில் விஜய் நடித்து பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகர்களில் முக்கிய ஒருவராக வலம் வரும் விஜய் தனது 66 ஆவது படமான வாரிசு எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இயக்குனர் வம்சியுடன் முதல் முறையாக கைகோர்த்து நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் உடன் இணைந்து முதல் முறையாக தெலுங்கு முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை தொடர்ந்து அடுத்து விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இரண்டாவது முறையாக கைகோர்த்து தனது 67வது திரைப்படத்தில் இணைய உள்ளார். தொடர்ந்து கமர்சியல் படங்களை தேர்வு செய்து நடித்து வரும் விஜய் அனைத்து படங்களிலும் ஒரே மாதிரியான தோற்றத்திலே நடித்து வருகிறார்.

இதைப்பற்றி அவரிடமே கேட்கையில் உங்களை ஏன் வித்தியாசமான கெட்டப்பில் பார்க்க முடியவில்லை என கேட்டதற்கு அந்த மாதிரியான புகைப்படங்களை எடுத்து நானே பார்த்துக் கொள்வேன் ஆனால் அதை என்னால் பார்க்க முடியாது. பின்பு எப்படி அதை மக்கள் பார்ப்பார்கள் என்ற காரணத்தினாலே நான் ஒரே மாதிரியாக தோற்றத்தில் நடிக்கிறேன் என்று கூறினார்.

மேலும் அவரிடம் கேட்கையில் நேஷனல் அவார்டு பெரும் படங்களில் நடித்து அவார்டு வாங்கும் ஆசை உங்களுக்கு இருக்கா என கேட்டதற்கு அந்த மாதிரியான படங்கள் பார்ப்பதற்கு மட்டும் பிடிக்கும். ஆனால் நான் நடிக்கும்போது அந்த எண்ணங்களில் நடிக்க மாட்டேன் எனவும் கூறியுள்ளார்.