தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என அனைவராலும் அழைக்கப்பட்டு வருபவர் இயக்குனர் ஷங்கர். இவர் இயக்கும் திரைப்படங்கள் பிரம்மாண்டமாக பிரம்மாண்டமாகவும் ஹிட் அடிக்கக்கூடியதாகவும் இருக்கும்.மேலும் இயக்குனர் ஷங்கர் அனைத்து நடிகைகளுக்கும் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார்.
ஆனால் பதினைந்து வருடத்திற்கு மேலாகியும் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை திரிஷாவிற்கு இன்னும் அவரது திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுக்கவில்லை இதுவே த்ரிஷாவுக்கு ஒரு ஏக்கமாக உள்ளது.
மேலும் திரைக்கு வந்து சில வருடங்களேயான நடிகை ப்ரியா பவானி சங்கருக்கு அவரது இந்தியன் டு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். ஆனால் 17 வருடங்களுக்கு மேலான நடிகை திரிஷாவுக்கு ஏன் இன்னும் எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்க வாய்ப்பு கொடுக்கவில்லை என ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
ஷங்கர் இயக்கும் திரைப்படங்களில் அவருக்கு உதவி இயக்குனராக இருக்கும் இயக்குனர்கள் ஒரு சில கதாபாத்திரங்களுக்கு திரிஷா நடித்தால் நன்றாக இருக்கும் என அவருக்கு சிபாரிசு செய்வார்களாம் ஆனால் அதற்கு இயக்குனர் ஷங்கரோ வேண்டவே வேண்டாம் என மறுத்து கூறிவிடுவாராம்.
மேலும் அதனை தொடர்ந்து தற்போது இயக்குனர் ஷங்கர் அவர்கள் தமிழ் திரைப்படங்களை இயக்குவதை கைவிட்டு தெலுங்கு சினிமாவிற்கு படை எடுத்து விட்டார். இந்த நிலையில் இனி சங்கர் திரைப்படத்தில் திரிஷாவிற்கு நடிக்க வாய்ப்பு கிடைப்பது என்பது அரிதுதான்.
மேலும் திரிஷாவிற்கு வயது ஆகி கொண்டேயிருக்கிறது. எனவே அப்படியே இவருக்கு இனி வாய்ப்பு கிடைத்தாலும் ஏதாவது துணை கதாபாத்திரமாக தான் கிடைக்கும் என கூறுகின்றனர். மேலும் இவர்கள் இருவருக்கும் இடையில் என்ன பஞ்சாயத்து இருக்குமோ என பேசி வருகின்றனர்.