நடிகர் எஸ் ஜே சூர்யா அண்மை காலமாக சினிமா உலகில் ஹீரோ, வில்லன் போன்ற கதாபாத்திரங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான டான் திரைப்படம் கூட மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று அசத்தியது.
அதற்கு முன்பாக மகேஷ்பாபுவுடன் ஸ்பைடர், விஜயுடன் மெர்சல், சிம்புவுடன் மாநாடு என தொடர்ந்து வில்லன் ரோலில் மிரட்டி வெற்றிகண்டார். இப்படி தொடர்ந்து படங்களில் நடித்து வந்தாலும் இவர் இயக்கிய படங்களும் இதுவரை வெற்றி கொண்டு தான் உள்ளது அந்த வகையில் அஜீத்தை வைத்து வாலி விஜயை வைத்து குஷி என இரண்டு வெற்றிப்படங்களை கொடுத்தார்
அதன்பின் இவர் பெரிதாக படங்களை இயக்காமல் போனார். ஆனால் ரசிகர்களுக்கு இவர் நடிப்பதையும் தாண்டி படங்களை இயக்கினார் நிச்சயம் வெற்றி பெறும் என கூறிவருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் எஸ் ஜே சூர்யா பேட்டி ஒன்றில் ஏன் படங்களை இயக்கவில்லை என்பது குறித்து அவரே பேசி உள்ளார்.
நான் விஜய்யின் குஷி படம் பிறகு எந்த ஒரு தமிழ்நாட்டில் இதுவரை படம் பண்ணவில்லை. 2000 ஆண்டுக்கு பிறகு நான் எந்த ஒரு தமிழ் ஹீரோ வைத்தும் படம் பண்ணவில்லை. பெரிய தயாரிப்பாளர்கள் தங்களின் பிள்ளைகளை வைத்து படம் எடுத்து தோல்வி அடைந்துவிட்டால் என்றால் கவலைப்பட மாட்டார்கள்.
நாம் நடித்த படம் தோல்வியை சந்தித்தால் யார் காசு போடுவது அதனால் ஒரு படம் இயக்கி அதில் வரும் காசை வைத்து என நடிக்க ஆரம்பித்தேன் நான் இதுவரை இயக்கிய படங்கள் எல்லாமே டாப் நடிகர்களை வைத்து தான் இயக்கி வருகிறேன் என்று கூறியிருந்தார் இப்படி இவ்வாறு பேட்டி அளித்த வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
This Why I Dindt Direct Other Heros After #Kushi Director #sjsuryah Reveals… pic.twitter.com/y80FPRxHjs
— chettyrajubhai (@chettyrajubhai) May 19, 2022