தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் டாப் நட்சத்திரம் உடன் ஜோடி சேர்ந்து நடித்ததன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார்.
அந்த படங்களும் சூப்பர் டுப்பர் ஹிட் அடித்தது அதன் விளைவாக இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் சமந்தாவை தேடி வந்த வாய்ப்புகளை கொடுக்கின்றனர். அளவிற்கு தற்பொழுது தென்னிந்திய சினிமா உலகில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்துள்ளார் சினிமாவில் வெற்றி நடை கண்டு வருகிறார்.
சினிமா வாழக்கை நல்லா போனாலும் நிஜ வாழ்க்கையில் மட்டும் பல பிரச்சனைகளை சந்தித்து தான் வருகிறார். சமந்தா திருமண வாழ்க்கை பெரும் சோகம் இவர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நன்கு சிறப்பாக வாழ்ந்து வந்த நிலையில் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக தற்போது பிரிந்து உள்ளனர். சமந்தா மீது மிகப் பெரிய பிரச்சனை எதுவும் இல்லை.
அதனால் நாகசைதன்யா குடும்பம் ஜீவனாம்சமாக 200 கோடி தர முடிவெடுத்தது ஆனால் நடிகை சமந்தாவோ எனக்கு உங்கள் காசு வேண்டாம் என உதறித் தள்ளி விட்டார். அதற்கு முக்கிய காரணம் சமந்தா ஏற்கனவே தான் சம்பாதித்த சொத்து வைத்திருக்கிறார் அதுமட்டுமில்லாமல் தற்பொழுதும் வெப்சீரிஸ் மற்றும் பட வாய்ப்புகளும் நிறைய குவிந்து உள்ளதால் அவர் அதிக அளவில் சம்பாதிக்கிறார்.
அந்த காரணத்தினாலேயே நாகார்ஜுனா வீடு கொடுத்த 200 கோடி காசு வேண்டாம் என கூறியுள்ளாராம் இந்த நிலையில் நடிகை சமந்தா முழு சொத்து மதிப்பு எவ்வளவு என்ற தகவல் கிடைத்து உள்ளது. சமந்தாவின் சொத்து மதிப்பு 84 கோடி என தெரியவந்துள்ளது.