எம்ஜிஆரை ஏன் சுட்டிங்க.. ஜெயிலுக்குப் போகும் தருவாயில் கூட நக்கலாக பதிலளித்த MR ராதா.? 55 வருடங்களாக மறைக்கப்பட்ட உண்மை

MGR
MGR

தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர் இருக்கிறார்கள் அவர்களுக்கு எல்லாம் ஒரு முன்னோடியாக திகழ்ந்தவர் எம்ஜிஆர். இவர் ஆரம்பத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து பின் போக போக ஹீரோ கதாபாத்திரங்களில் நடித்து வெற்றிகளை கொடுக்க ஆரம்பித்தார் இதனால் திரை உலகில் பல வருடங்களாக எம்ஜிஆர் நடித்து வந்தார்.

இப்படி ஓடிக்கொண்டிருந்த இவர் திடீரென அரசியலில் இறங்கி  தனக்கென ஒரு மக்கள் பட்டாளத்தை உருவாக்கி பின் முதலமைச்சர் என்ற அரியணையை பெற்றார் அதன் பிறகு எம்.ஜி.ஆரின் சினிமா பயணமும் சரி,  அரசியல் பயணமும் விஸ்வரூபத்தைத் தொட்டது இப்படி பயணித்த எம்.ஜி.ஆரை எம்ஆர் ராதா சுட்டார் இது குறித்து தற்பொழுது பல தகவல்கள் வெளிவந்தாலும் உண்மையில் என்ன நடந்தது என்பது பல பேருக்கு தெரியாது அது குறித்து தான் நாம் தற்பொழுது விலாவாரியாக பார்க்க இருக்கிறோம்..

எம்ஜிஆரை சுட்ட வழக்கில் எம் ஆர் ராதாவுக்கு ஐந்தாண்டு சிறை காவல் தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் தீர்வு வழங்குவதற்கு முன்பாக அவரிடம் கேட்டபொழுது அதற்கு நக்கலாக பதில் அளித்துள்ளார். எம் ஆர் ராதாவிடம் ஏன் நீங்கள் எம்ஜிஆரை சுட்டீர்கள் என கேட்டதற்கு நான் சுட கூடாதா நானும் எம்ஜிஆர்ரும் நண்பர்கள் தான் என்றும், புருஷன் பொண்டாட்டி சண்டை போடுவது இல்லையா.. அண்ணன் தம்பிக்குள் சண்டை வருவது இல்லையா..

அதே மாதிரி தான் நாங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுக் கொண்டும் என நக்கலாக பதில் அளித்தார். மேலும் பேசிய அவர் என்ன கத்தி இருந்தா கத்தி சண்டை, கம்பு இருந்தா கம்பு சண்டை எங்களுக்கு அந்த ரெண்டும் இல்லாததால் துப்பாக்கி மட்டும் தான் இருந்தது என்று பதில் கொடுத்தார் அதனால் துப்பாக்கி சண்டை போட்டுக்கிட்டு துப்பாக்கியால் சுட்டுவிட்டேன் என்றும் இது பெரிய விஷயமா பேசிக்கிட்டு குத்தம் கண்டுபிடிக்கிறீங்க போவீங்களா என்று நக்கலாக   பேசிவிட்டு ஜெயிலுக்கு சென்று இருக்கிறார்.

கொஞ்ச நாள் கழித்து பெரியாரின் இறப்பிற்கு பாரோலில் வந்தால் எம்ஆர் ராதா.. எம்ஜிஆரை பார்த்து என்ன ராமச்சந்திரா எப்படி இருக்கிறாய் என்று கேட்டு என்ன அரசியல் போய் சேர போகிறாயா என்று கேட்டு இருக்கிறார்.  அதற்கு எம்ஜிஆர் ஆம் அண்ணே என்று தெரிவித்திருக்கிறார். உடனே அங்கே இருந்தவர்கள் மறுபடியும் பிரச்சனை ஏதாவது வந்திரப் போகிறது என இருவரையும் கை தாங்கலாக கூப்பிட்டு வரும்பொழுது எம் ஆர் ராதா நக்கலாக இன்னும் ரெண்டு குண்டு சேர்த்து சுட்டு இருக்கலாமே என்று கிண்டல் அடித்திருக்கிறார்.