ரஜினி, விஜயுடன் அந்த மாதிரி பாடல்களுக்கு நடனம் ஆடியது ஏன்.? விளக்கம் கொடுத்த நயன்தாரா..

nayanthara-
nayanthara-

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. இவர் தமிழில் ரஜினி, அஜித், விஜய், சூர்யா, சிம்பு, சிவகார்த்திகேயன், தனுஷ் போன்ற பல டாப் நடிகர்களுடன் நடித்து நம்பர் ஒன் நடிகையாக வலம் வருகிறார். இதுபோக நயன்தாரா சோலோவாக சில படங்களிலும் நடித்து பல இளம் நடிகைகளுக்கு ரோல் மாடலாக திகழ்ந்து வருகிறார்.

கிட்டத்தட்ட 20 வருடங்களாக சினிமாவே கதி என ஓடிக்கொண்டிருந்த நயன்தாரா இடையில் சில நடிகர்களுடன் காதல் வலையில் சிக்கினாலும் கடைசியாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமணம் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற்றது.

தற்போது நயன்தாரா சினிமா குடும்பம் என இரண்டையும் சிறப்பாக நடத்தி வருகிறார். நயன்தாரா கையில் இப்போது கனெக்ட், கோல்ட், ஜவான், நயன்தாரா 75 போன்ற பல படங்கள் இருக்கின்றன. அதில் முதலாவதாக கனெக்ட் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இந்த நிலையில் கனெக்ட் படத்தின் ப்ரமோஷனுக்காக நயன்தாரா ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.

அந்த பேட்டியின் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதில் நயன்தாரா பல்வேறு கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அதில் ஒன்றாக உங்கள் சினிமா பயணத்தின் ஆரம்பகட்டத்தில் இருந்த போது விஜய்யுடன் கோடம்பாக்கம் ஏரியா, ரஜினி உடன் பல்லே லக்கா ஆகிய பாடல்களில் நடனம் ஆடியது ஏன் எனக் கேட்டனர்.

அதற்கு நயன்தாரா கூறியது “அந்த நேரத்தில் நான் ஸ்பெஷல் பாடல்களில் ஆடுவது பற்றி பலரும் எனக்கு வேண்டாம் என அட்வைஸ் கொடுத்தார்கள் அப்படி செய்தல் அதன்பின் அந்த வாய்ப்புகள் மட்டுமே வரும் எனக் கூறினர், ஆனால் ஸ்பெஷல் பாடலில் ஆடுவது ஸ்பெஷலான விஷயம் நான் ஸ்பெஷல் என்பதால் தான் என்னை அழைக்கிறார்கள். அது எப்படி இருக்கும் என பார்க்கிறேன் இது லேர்னிங் ப்ராசஸ்தான் என நயன்தாரா கூறியுள்ளார்.