தமிழ் சினிமா உலகில் இன்று முன்னணி நடிகராக பார்க்கப்படுபவர் நடிகர் சிம்பு. இவர் சமீபகாலமாக நல்ல கதைய அம்சமுள்ள படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் மாநாடு, பாத்து தல போன்ற படங்கள் மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்த நிலையில் அடுத்ததாக சிறந்த இயக்குனர்களுடன் கைகோர்த்து படம் பண்ணி வருகிறார்.
சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர் சிம்புவுடன் நடிக்க பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள் ஆனால் ஒரு சிலருக்கு அந்த வாய்ப்பு கிட்டுகிறது அப்படித் தான் சிம்புவின் பத்து தல திரைப்படத்தில் நடித்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கைத்தட்டல் வாங்கியவர் நடிகர் சந்தோஷ் பிரதாப்.
இவர் விஜய் டிவி குக் வித் கோமாளியின் மூலம் பெரிய அளவில் பிரபலம் அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பொழுது கூட அருள்நிதியின் கழுவெத்தி மூர்க்கன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சந்தோஷ் பிரதாப் நடித்துள்ளார். இவர் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் அப்பொழுது சிம்புவின் பத்து தல படத்தில் நடித்தது குறித்து வெளிப்படையாக பேசியது.
பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது முதலில் ஏன் பத்து தல படத்தில் நடித்தோம் என யோசித்தேன் இதை வீட்டிற்கு கூட முதலில் நான் சொல்லவில்லை பிறகு படம் ரிலீஸ் ஆனது. படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்திருந்தேன். பத்து தல படத்தின் ஆரம்பத்தில் சிம்பு அவரை கொன்றுவிடுவார் இதனால் அவருக்கு பெரிய அளவு காட்சிகள் இல்லை..
ஆனால் அவர் வந்த காட்சிகள் ஒவ்வொன்றும் சிறப்பாக இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் கைத்தட்டல் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது இதனை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டார். இதனை தொடர்ந்து பல படங்களில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.