தமிழ் சினிமாவில் இன்று தவிர்க்க முடியாத ஒரு நடிகர் அஜித்குமார் இவர் சமீப காலமாக சிறந்த இயக்குனர்களுடன் கைகோர்த்து நல்ல படங்களை கொடுத்து வருகிறார் அந்த வகையில் இவர் கடைசியாக நடித்த துணிவு திரைப்படம் நல்ல மெசேஜ், ஆக்சன், காமடி,செண்டிமெண்ட் என அனைத்தும் அற்புதமாக இருந்ததால்..
ரசிகர்களையும் தாண்டி குடும்ப அட்டியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதால் அதிக நாட்கள் ஓடி வசூல் ரீதியாக வெற்றி கண்டது இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து லைகா நிறுவனத்துடன் கைகோர்த்து தனது 62 வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். வெகு விரைவிலேயே அதற்கான அறிவிப்பு வெளிவந்து..
படத்தின் அடுத்த அடுத்த அப்டேட்டுகளும் உடனே வெளிவரும் என சொல்லப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் அஜித் பற்றிய பழைய மற்றும் புதிய செய்திகள் இணையதள பக்கங்களில் உலா வருவது வழக்கம்.. அஜித் திரை உலகில் ஏகப்பட்ட திரைப்படங்களை தவறி விட்டிருக்கிறார்.
அதன்படி 2002 ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் காக்க காக்க திரைப்படத்தில் முதலில் நடிக்க வேண்டியது அஜித் தானாம்.. அவர் தவற விடவே பின் சூர்யா நடித்து வெற்றி கண்டார். இந்த திரைப்படத்தை அஜித் தவறவிட்டது எப்படி என்பது குறித்து சமீபத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் பேசி உள்ளார் அதில் அவர் சொன்னது..
கதையை எழுதிவிட்டு முதலில் அஜித்துக்கு சொல்லி உள்ளார் ஆனால் அவரோ தற்போது போலீஸ்க் கதாபாத்திரத்தில் இப்போ நடித்தால் சரி வராது என கூறி காக்க காக்க திரைப்படத்தை தவறவிட்டாராம் பிறகு சூர்யாவை வைத்து இந்த படத்தை எடுத்ததாக கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்தார்.