விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மற்றும் ரசிகர்களின் பேவரட் சீரியலாக இருந்தது ராஜாராணி சீசன் 1. இதில் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தனர். இதில் நடித்து வரும் போது சஞ்சீவ் மற்றும் அலியா காதலித்து பின்பு ஒருகட்டத்தில் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணமாகி சில வருடங்களிலேயே ஆல்யாவிற்கு ஐலா என்ற மகள் பிறந்துள்ளார். பின்பு சிறு இடைவேளைக்குப் பிறகு ராஜா ராணி சீசன் 1 சீரியலை எடுத்த இயக்குனர் பிரவீன் பெண்ணெட் ராஜா ராணி சீசன்2 தொடரை எடுத்து வந்தார். இதில் ஹீரோவாக பிரபல சின்னத்திரை நடிகர் சித்து மற்றும் ஹீரோயினாக ஆலியா மானசா நடித்து வந்தனர்.
இந்த சீரியலில் நடித்து வரும் போது அலியா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்ததை அடுத்து தொடரில் இருந்து பாதியிலே விலகியுள்ளார். அவருக்கு பதில் தற்போது ரியா என்ற பிரபலம் ராஜாராணி சீசன்2 நடித்து வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் ஆல்யாவிற்கு இரண்டாவது குழந்தையாக மகன் பிறந்துள்ளார்.
இதனால் சஞ்சீவ் மற்றும் அலியா ஜோடி மகிழ்ச்சியாக உள்ளனர். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ரசிகர் ஒருவர் ஆல்யாவிடம் நீங்கள் மீண்டும் ராஜாராணி 2வில் நடிப்பீர்களா என்று கேட்டதற்கு நான் இனி அந்த சீரியலில் நடிக்கப் போவதில்லை என கூறியுள்ளார்.
மேலும் பாண்டியன் ஸ்டோர் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த காவியா அந்த சீரியலில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகிவருகின்றன நிலையில் ஆலியா மானசா பாண்டியன் ஸ்டோர் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என கூறப்படுகின்றன. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.