அஜித் ஏன் பிறந்த நாளை கொண்டாடவில்லை என தெரியுமா!! விவரம்உள்ளே!!

thala
thala

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தல அஜித் ஆவார். இவர் 1990 ஆம் ஆண்டு என் வீடு என் கணவர் என்னும் திரைப்படத்தின் மூலம் பள்ளி மாணவராக சிறு வேடத்தில் நடித்திருப்பார்.

தமிழ் திரைப்படத்தில் அமராவதி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் இப்படம் இவருக்கு  வெற்றியை தரவில்லை.அதற்கு அடுத்ததாக 1995 ஆம் ஆண்டு வெளியான ஆசை திரைப்படம் இவருக்கு வெற்றியைத் தந்தது. இதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து வெற்றியை நிலைநாட்டினார்.

1995-ஆம் ஆண்டு ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் விஜய்யும் அஜீத்தும் ஒன்றாக இணைந்து நடித்த ஒரே படம் இத்திரைப்படம் ஆகும். இப்பொழுது தல அஜித் அவர்கள் 59 திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது அறுபதாவது திரைப்படமான வலிமை என்ற படத்தில் நடித்துவருகிறார்.தற்பொழுது தல அஜித் அவர்கள் அவருடைய ரசிகர்களுக்கு பரபரப்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது கரோனா தாக்கத்தின் காரணமாக மக்கள் அனைவரும் அவதிப்பட்டு வரும் நிலையில் மே 1 ஆம் தேதியன்று தல அஜித்து பிறந்த நாளாகும். இதனைத் தொடர்ந்து அவருடைய ரசிகர்கள் அஜித் பிறந்த நாளிற்காக தயாராகி வருகின்றன. இந்நிலையில் அஜித் அவர்கள் தன்னுடைய பிறந்த நாளை யாரும் கொண்டாட வேண்டாம் என அறிக்கை வெளியிட்டுள்ளார். இதனால் அவருடைய ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.