தமிழ் திரை உலகில் நடிகர்களை வைத்து இயக்குனர்கள் திரைப்படம் எடுக்கிறார்கள் என்றால் ஒரு சில இயக்குனர்கள் மாதக்கணக்கில் திரைப்படத்தை முடித்து விடுவார்கள் ஆனால் ஒரு சில இயக்குனர்கள் வருட கணக்கில் ஆனாலும் அந்த திரைப்படத்தை எடுத்து வருவார்கள் அவ்வாறு வருடக்கணக்கில் திரைப்படங்களை எடுத்து வரும் இயக்குனர் என்றால் அது ஷங்கர் தான்.
இவர் பொதுவாக ஒரு திரைப்படத்தை ஒரு வருடம் அல்லது இரண்டு வருடத்தில் எடுப்பார் என்பது பலருக்கும் தெரிந்து தான் ஆனால் இவர் சமீபத்தில் இரண்டு படங்களை தொடர்ச்சியாக இயக்கப் போவதாக அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சி ஆக்கியிருந்தார்.
ஷங்கர் கமல்ஹாசனை வைத்து இந்தியன்2 என்ற திரைப்படத்தை இயக்கி வந்தார் அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு போது ஒரு சில நபருக்கு விபத்து ஏற்பட்டு விட்டதால் படம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஷங்கருக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையில் வாக்குவாதம் முற்றி படம் என்னாச்சுனு என்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பி வருகிறார்கள் கமல்ஹாசனும் இந்தியன் 2 படத்தை கண்டு கொள்ளாமல் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார்.
அதே நேரத்தில் ஷங்கரும் அதை கண்டுக்காமல் தெலுங்கு,ஹிந்தி என நடிகர்களை வைத்து படம் எடுத்து வருகிறாராம் இவர் முதலில் ராம்சரண் நடிக்கும் தெலுங்கு படத்தை இயக்க இருக்கிறார் என அவரே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஷங்கர் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அந்நியன் படத்தை ரீமேக் செய்ய உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.ஹிந்தி ரீமேக்கில் நடிகர் ரன்வீர் சிங் அவரை அந்நியன் ரீமேக்கில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ரன்வீர் சிங் பார்ப்பதற்கு அழகாக இருப்பார் ஆனால் இவர் எப்படி அந்நியன் ரீமேக்கில் நடிப்பார் என ரசிகர்கள் பலரும் பலவிதமான கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.