ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் இந்தியன் 2 இந்த திரைப்படத்தை மிக பிரமாண்ட பொருட்செலவில் லைக்கா நிறுவனம் தயாரித்து வந்தது. ஆரம்பத்தில் கோலாகலமாக நடத்தப்பட்டு இருந்தாலும் ஈவிபி பிலிம் சிட்டியில் எதிர்பாராதவிதமாக கிரெயின் விபத்து ஏற்பட்டு அதில் சில டெக்னீசியன்கள் உயிரிழந்தனர்.
இதனை எடுத்து அப்படியே அந்த வேலைகள் போடப் பட்டது இதனையடுத்து மீண்டும் தொடங்குமா தொடங்காத என்ற நிலையில் இழுத்துக் கொண்டே போனதால் ஒரு கட்டத்தில் ஷங்கர் அடுத்தடுத்த படங்களை இயக்க ஆர்வம் காட்டினார். கமல் ஒருபக்கம் அரசியல், சினிமா என மறுபக்கம் போனார் இதனால் லைகா நிறுவனம் போட்டோ பணம் அவ்வளவுதான் என தலையில் துண்டு போடாமல் கோர்ட்டை நாடியது.
ஆரம்பத்தில் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிய வில்லை என்றாலும் போகப்போக பிரச்சனை சரியாகி இருவரும் சமரசம் ஆகி உள்ளனர் தற்போது லைக்கா நிறுவனமும் ஷங்கரும் இணைந்துள்ளதால் இந்தியன் 2 திரைப்படத்தை அடுத்த மாதம் அல்லது அடுத்த வருடம் ஜனவரி ஆரம்பத்தில் படம் தொடங்கும் என தெரியவருகிறது. இதில் பல டாப் நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர்.
அதிலும் குறிப்பாக கமலுக்கு ஹீரோயினாக காஜல் அகர்வால் நடித்து வந்தார் ஆனால் தற்போது அவர் கர்ப்பமாக இருப்பதை எடுத்து மருத்துவர்கள் இனி நீங்கள் படங்களில் நடிக்க வேண்டாம் என கூறியுள்ளனர் அதற்காக இந்தியன்2 படக்குழுவிடம் நான் இனி இந்த படத்தில் நடிக்கப் போவதில்லை என கறாராக சொல்லிவிட்டாராம். இதனால் அவரது கதாபாத்திரத்தில் வேறு ஒரு நடிகையை நடிக்க வைக்க படக்குழு முயற்சி செய்து வருகிறது.
அவருக்கு பதிலாக நடிகை த்ரிஷாவை நடிக்க வைக்க பார்க்கிறது ஏற்கனவே கமலுடன் த்ரிஷா மன்மதன் அம்பு, தூங்காவனம் ஆகிய படங்களில் நடித்து உள்ளனர் இவர்கள் இருவரும் இணையும் பட்சத்தில் மூன்றாவது முறையாக கைகோர்க்கும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் இதுவரை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஈ வி பி ஃபிலிம் சிட்டியில் தான் மீண்டும் சூட்டிங்கை தொடங்க இருப்பதாக தெரியவருகிறது.