நடிப்பிற்கு பெயர் போன உலகநாயகன் கமலஹாசன் தொடர்ந்து சிறப்பான படங்களில் நடித்து ஓடிக்கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான விக்ரம் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக சாதனை படைத்தது. விக்ரம் திரைப்படம் ஒட்டுமொத்தமாக சுமார் 400 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது என்பது குறிப்பிடத்தக்கது.
விக்ரம் படத்தை தொடர்ந்து உலகநாயகன் கமலஹாசன் கிடப்பில் வைத்திருந்த இந்தியன் 2, சபாஷ் நாயுடு ஆகிய படங்களில் முதலில் நடிப்பார் என கூறப்படுகிறது அதனைத் தொடர்ந்து தேவர்மகன் 2 படத்தில் கமல் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இப்படி இருக்கின்ற நிலையில் உலகநாயகன் கமலஹாசன் இந்தியன் 2 திரைப்படத்திற்காக தற்பொழுது அமெரிக்கா சென்று உள்ளார்.
உடல் எடையை சரி செய்து விட்டு இந்தியன் 2 படத்தில் நடிப்பார் என சொல்லப்படுகிறது அதற்குள் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரும் தற்பொழுது தெலுங்கு பட ஹீரோ ராம்சரண் அவர்களை வைத்து RC 15 என்னும் படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது போய் கொண்டு இருக்கிறது. கமல் திரும்பி வருவதற்குள் படத்தை எடுத்து முடித்து விட வேண்டும் என திட்டவட்டமாக ஷங்கர் இருப்பதாக சொல்லப்படுகிறது.
ஆனால் அண்மையில் இந்த படத்தின் சூட்டிங் ஒரு பள்ளிக்கூடத்தில் எடுக்கப்பட்டது அப்பொழுது பிரச்சனை ஏற்பட்டதால் ஷூட்டிங் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த படத்தை எடுக்க சங்கர் ஆர்வமாக இருக்கிறார் என தெரிய வருகிறது இதை முடித்துவிட்டு ஷங்கரும் கமலும் இந்தியன் 2 படத்தில் இணைவார்கள் என தெரிய வருகிறது இந்த படத்தின் சூட்டிங் செப்டம்பர் மாதம் தொடங்கலாம் என சொல்லப்படுகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் இந்தியன் 2 படத்தின் காட்சிகள் ஏற்கனவே பாதி எடுக்கப்பட்டது அதில் ஹீரோயினாக காஜல் அகர்வால் நடித்திருந்தார் அவர் கர்ப்பமானதால் என்னால் அப்போது நடிக்க முடியவில்லை என சொன்னார் ஆனால் தற்பொழுது பேச்சை மாற்றி என்னை இந்தியன் 2 படத்தில் இருந்து நீக்கி விடாதீர்கள் என கேட்டுக் கொண்டிருக்கிறார் ஆனால் படகுழுவோ காஜல் அகர்வால் இனி நமக்கு தேவையில்லை என கூறி வேறு ஒரு பாலிவுட் நடிகையை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். தீபிகா படுகோன் அல்லது கத்ரீனா கைஃப் இருவரில் யாரேனும் ஒருவரை நடிக்க வைக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.