சன் டிவியின் டிஆர்பிக்கு மிகப்பெரிய அளவில் உறுதுணையாக இருந்த எதிர்நீச்சல் சீரியல் திடீரென முடிவுக்கு வந்தது. அதில் குணசேகரன் ஆக ஆரம்பத்தில் மிரட்டிய மாரிமுத்து இறந்த பிறகு சீரியலின் மவுசு குறைந்தது.
அதன் பிறகு வேலராமமூர்த்தி அவருடைய கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால் அவருடைய வில்லத்தனமான பேச்சும் தோற்றமும் சீரியலின் போக்கை தலைகீழாக மாற்றிவிட்டது.
இதனால் டிஆர்பியும் குறைந்தது. இதுவே சீரியல் முடிவுக்கு வந்ததற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. இருப்பினும் ரசிகர்களை ஏமாற்றாமல் இந்த கூட்டணி விரைவில் இரண்டாம் பாகம் மூலம் வர இருக்கிறது.
அந்த நாளுக்காகவும் அறிவிப்புக்காகவும் எதிர்நீச்சல் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்த சூழலில் தான் சீரியலில் ஜனனி கதாபாத்திரத்தில் நடித்த மதுமிதா ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். அதாவது இரண்டாவது பாகத்தில் நான் இல்லை.
சில தனிப்பட்ட காரணங்களால் நடிக்க முடியவில்லை என விளக்கம் அளித்திருந்தார். அதையடுத்து அந்த கேரக்டரில் யார் நடிப்பார் என பெரும் விவாதமே நடந்தது. இந்நிலையில் அந்த கேரக்டரில் நடிக்க சீரியல் குழு விஜே பார்வதியை அணுகி உள்ளனர்.
அவரும் சந்தோஷமாக சம்மதித்த நிலையில் தற்போது பார்வதி ஜனனியாக கமிட் ஆகி இருக்கிறார். விரைவில் அனைவரும் எதிர்பார்த்த அதிகாரபூர்வமான தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.