தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு இயக்குனராக வலம் வருபவர் முருகதாஸ் துப்பாக்கி, சர்க்கார், ஸ்பைடர் என தொடர் வெற்றி படங்களை கொடுத்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இப்பொழுது சொல்லிக்கொள்ளும்படி படங்களை இயக்கவில்லை..
என்றாலும் இவர் இயக்கத்தில் 2002ஆம் ஆண்டு வெளியான துப்பாக்கி திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது இந்த படத்தில் விஜய் ஒரு ராணுவ அதிகாரியாக நடித்திருப்பார். இவர்களுடன் இணைந்து காஜல் அகர்வால், சத்தியன் போன்ற பலர் நடித்து அசத்தியிருப்பார்.
படம் வெளிவந்து அப்போது மிகப்பெரிய ஒரு பிரமாண்ட வசூலை அள்ளியது. துப்பாக்கி திரைப்படம் முருகதாசுக்கு எப்படி பெஸ்ட் படமோ அதே போல விஜய்க்கும் சிறந்த படமாக அமைந்தது. ஆனால் உண்மையில் துப்பாக்கி திரைப்படம் விஜய்கான படம் இல்லையாம் முதலில் ஏ ஆர் முருகதாஸ் நடிகர் சூர்யாவுக்கு தான் துப்பாக்கி படத்தின் கதையைக் கூறி உள்ளார்.
ஆனால் சூர்யாவோ முதலில் ஏழாம் அறிவு படத்தின் கதையை உருவாக்குங்கள் அதன்பின் துப்பாக்கி படத்தில் நடிக்கிறேன் என கூறியுள்ளார். முருகதாஸும் சூர்யாவை வைத்து ஏழாம் அறிவு எனும் சூப்பர் படத்தை முடித்துவிட்டு அடுத்த படத்திற்கு தயாரான நிலையில்தான் விஜயின் அப்பா சந்திரசேகர் தனது மகனுக்கு ஒரு கதையை கூறுங்கள் என சொல்லி உள்ளார்
உடனே ஏ ஆர் முருகதாஸ் துப்பாக்கி படத்தின் கதையை கூற ரொம்ப பிடித்துப் போகவே அந்த படத்தில் விஜய் நடித்ததாக கூறப்படுகிறது. அந்த காரணத்தினால் துப்பாக்கி திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை சூர்யா இழந்ததாக கூறப்படுகிறது.