ஹச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் வலிமை இந்த திரைப்படம் பல வருடங்களாக எடுக்கப்பட்டு வந்த நிலையில் ஒருவழியாக ஷூட்டிங்கை முடித்து படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவெடுத்துள்ளது அந்த வகையில் இந்த திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என தெரிவித்துள்ளது.
அதற்கு முன்பாக இந்த திரைப்படத்தில் இருந்து சில அப்டேட்களை வெளியீட்டு கொண்டு வருகிறது படக்குழு. மேலும் அஜித்தின் வலிமை திரைப்படம் குறித்தும் அஜித் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டு வருகிறார் இயக்குனர். இந்த திரைப்படத்தின் டிரைலர் தீபாவளிக்கு வெளியாகும் என தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
இப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக தற்பொழுது கார்த்திகேயா நடித்து உள்ளார் ஆனால் இந்த திரைப்படத்தில் முதன் முதலில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க அணுகியது என்னமோ கேரளா நடிகரான டோவினோ தாமஸ் தான் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டார் என பத்திரிகையில் வினோத் நேரடியாக பேட்டி கொடுத்தார்.
டோவினோ தாமஸ் வலிமை படத்தில் நடிக்க ஆர்வமாக இருந்தாலும் அவர் முன்னதாக நடிக்க ஒப்புக்கொண்ட பல படங்கள் தேதிகள் ஒத்து வராததால் போன காரணத்தினால் வலிமை படத்தில் அவரால் நடிக்க முடியாமல் போனது. இந்த திரைப்படத்தில் அவர் நடிக்க பெரிய ஆசைப்பட்டார் ஆனால் அது நிறைவேறவில்லை.
தமிழில் டோவினோ தாமஸ் தனுஷுக்கு வில்லனாக மாரி 2 திரை படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் வலிமை படத்தில் நடிக்காமல் போனதற்கு பிறகு தான் ஹஜ் வினோத் மற்றும் படக்குழு ஆகியோர் இணைந்து கார்த்திகேயனை வில்லனாக களம் இறங்க முடிவு செய்ததாம்.