நாட்டாமை திரைப்படத்தில் நடிகை குஷ்பூ நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் என்ற தகவலை 30 வருடங்களுக்கு பிறகு இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் கூறியுள்ளார்.
இயக்குனர் பாரதிராஜா, விக்ரமன், இராம்தாஸ், நாகேஷ், ராமராஜன், கே ரங்கராஜ் ,என பல இயக்குனர்களிடம் துணை இயக்குனராக பணியாற்றி வந்தவர் கே எஸ் ரவிக்குமார் அதனைத் தொடர்ந்து புரியாத புதிர் என்ற திரைப்படத்தின் மூலம் 1990 ஆம் ஆண்டு இயக்குனராக அறிமுகமானார். தான் இயக்கிய முதல் திரைப்படத்திலேயே சுவாரஸ்யமான கதைகளத்தால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
புத்தம் புது பயணம், ஊர் மரியாதை, பொண்டாட்டி ராஜ்ஜியம், சேரன் பாண்டியன், சூரியன், சந்திரன், சக்திவேல் என பல திரைப்படங்களை இயக்கினார். அதேபோல் இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்படும் ரஜினியின் முத்து படையப்பா ஆகிய திரைப்படங்களையும் இவர் தான் இயக்கினார். தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, கமல் என பல நடிகர்களை வைத்து கே எஸ் ரவிக்குமார் படத்தை இயக்கியுள்ளார்.
அந்த வகையில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு வெளியாக்கிய திரைப்படம் தான் நாட்டாமை இந்த திரைப்படத்திற்கான தமிழ்நாடு ஸ்டேட் ஃபிலிம்ஸ் விருதையும் ் இயக்குனருக்கான தமிழ்நாடு ஸ்டேட் ிலிம் விருதையும் பெற்றது மேலும் இந்த திரைப்படத்தில் சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் குஷ்பு, மீனா, ராஜா ரவீந்தரா, சங்கவி, மனோரமா, கவுண்டமணி, செந்தில் , பொன்னம்பலம், பாண்டு வினு சக்கரவர்த்தி என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.
பல வருடம் கழித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் கேஎஸ் ரவிக்குமார் நாட்டாமை திரைப்படத்தில் குஷ்பு நடித்த லட்சுமி என்ற கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தவர் மூத்த நடிகையான நடிகை லட்சுமி தான் ஆனால் அப்பொழுது ஒரு சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போக அதன் பிறகு குஷ்புவை இந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்ததாக கூறியுள்ளார் இந்த தகவலை சுமார் 30 வருடங்களுக்கு பிறகு கே எஸ் ரவிக்குமார் அவர்கள் கூறியுள்ளதால் வைரலாகி வருகிறது.