தமிழ் சினிமா உலகில் பல வெற்றி படங்களை இயக்கிய அசத்தியவர் கே எஸ் ரவிக்குமார் இவர் சினிமாவில் இயக்குனராக மட்டும் பணிபுரியாமல் ஒரு நடிகராகவும் சினிமா உலகில் தொடர்ந்து பல படங்களில் நடித்து அசத்தி வருகிறார் இதனால் கே எஸ் ரவிக்குமாரின் சினிமா பயணம் உயர்ந்து கொண்டே இருக்கிறது.
இவர் இதுவரை ரஜினி, கமல், அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களை வைத்து பல வெற்றி படங்களை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது இவர் 1999 ஆம் ஆண்டு தளபதி விஜயை வைத்து மின்சார கண்ணா என்னும் படத்தை எடுத்திருப்பார் இந்த படத்தில் விஜய் உடன் கைகோர்த்து ரம்பா, மணிவண்ணன், குஷ்பூ என ஒரு நட்சத்திர பட்டாளமே..
இந்த படத்தில் நடித்திருந்தது இந்த படம் எப்பொழுது வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தின் கதை என்னவென்றால் ஒரு பெண் தனது கணவர் செய்த கொடுமையால் ஆண்களை வெறுத்து வாழ்க்கையை வாழ்கிறார் ஆண் வாசமே இருக்கக் கூடாது என்பதற்காக வேலைக்காரர்கள் தொடங்கிய அனைவரையும் பெண்களாக வைத்துக் கொள்கிறார்.
அப்படிப்பட்ட அந்த பெண்ணை மாற்றுவது தான் இந்த படத்தின் கதை இந்த படம் முழுக்க முழுக்க காமெடி, சென்டிமென்ட், ரொமான்டிக் அனைத்து காட்சிகளும் சூப்பராக இருக்கும் இந்த படத்தில் விஜய் மிரட்டி இருப்பார் இந்த படம் அப்பொழுது வெளிவந்து வெற்றி பெற்றது இந்த படத்தில் முதலில் ரம்பாவுக்கு பதிலாக நடிக்க இருந்தது..
ரோஜா தான் சில காட்சிகள் அவர் நடித்துவிட்டு சில காரணங்களால் அவர் இந்த படத்தை விட்டு வெளியேறி உள்ளார் பிறகு தான் நடிகை ரம்பா இந்த படத்தில் கமிட்டானார் என சொல்லப்படுகிறது. இச்செய்தி தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.