சமீப காலமாக வாழ்க்கையில் சாதனை படைத்த பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை ஒரு படமாக எடுத்து வருகின்றனர் அந்த வகையில் சச்சின் தோனியை தொடர்ந்து தற்பொழுது கபில்தேவ் பற்றி படமாக்கப்பட்டுள்ளது ஆம் 1983 ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக உலக கோப்பையை வென்று அசத்தியது.
அப்பொழுது நடந்த நினைவுகளை மீண்டும் இப்பொழுது ரசிகர்களுக்காக படமாக உருவாகி உள்ளது அந்த திரைப்படத்திற்கு 83 என பெயர் வைக்கப்பட்டுள்ளது இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டிரெய்லரை அண்மையில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது இந்த படம் வருகின்ற டிசம்பர் 24ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தில் கபில்தேவ் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடித்து உள்ளார். மேலும் பல்வேறு டாப் நடிகர்கள் பல்வேறு முக்கிய நடிகரும் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நடிகர் தமிழக கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடித்துள்ளார். இந்த நிலையில் ஒரு சூப்பர் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
அதாவது கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் தற்போது ஜீவா நடித்து உள்ளார் ஆனால் முதன் முதலில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க படக்குழு அனுகியது என்னவோ நடிகர் சிவகார்த்திகேயன் தானாம் . ஸ்ரீகாந்தின் முகத்தோற்றம் சற்று சிவகார்த்திகேயனுக்கு பொருந்தும் என்பதால் படக்குழு முதலில் அவரை அணுகி உள்ளது.
ஆனால் அப்போது அவர் அயலான் படத்தில் நடித்த காரணத்தினால் இந்த படத்தில் அவர் நடிக்க முடியாமல் போனதாம். இச்செய்தி தற்போது இணையதளத்தில் தீயாய் பரவி வருகின்றன. இத்தனை பார்த்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இப்படி ஒரு படத்தை மிஸ் செய்து விட்டீர்களே என கூறி வருத்தப்பட்டு வருகின்றனர்.