அஜித் ஆரம்ப காலகட்டத்தில் காதல் சம்பந்தப்பட்ட படங்களை கைப்பற்றி நடித்ததால் இவருக்கு சினிமா ஆரம்பத்திலேயே பெண் ரசிகைகளின் வரவேற்பு அதிகமாக இருந்தது.அதை உணர்ந்து கொண்டு அஜித்தும் அது போன்ற படங்களை தேர்ந்தெடுத்து நடித்தால் தொடர் ஹிட் படங்களை கொடுக்க தொடங்கினர்.
இதனால் சினிமா ஆரம்பத்திலேயே சினிமாவுலகில் சாக்லேட் பாயாக வலம் வரத்தொடங்கினார். காதல் சம்பந்தப்பட்ட படங்களில் ஹீரோவாக மட்டும் நடிக்காமல் இரண்டாவது ஹீரோவாகவும் நடித்து அசத்தி நல்ல வரவேற்பைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் பார்திபன் நடிப்பில் வெளியான “நீ வருவாய் என” கார்த்தி நடிப்பில் வெளியான “உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்” போன்ற பல்வேறு படங்களில் முக்கிய ரோல்களில் நடித்து அசத்தியுள்ளார்.அதிலும் குறிப்பாக உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படம் அஜித்திற்கு எடுத்த உடனேயே வரவில்லை.
1998ஆம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது இந்த திரைப்படத்திம். கார்த்தி, ரோஜா ஆகியோர் முக்கிய ரோலில் நடித்தார்கள் இதில் அஜீத் இரண்டாவது ஹீரோவாக நடித்தார்.
இந்தப் படத்தில் அஜித்தின் நடிப்பு நல்ல வரவேற்பைப் பெற்றது ஆனால் இயக்குனர் விக்ரமன் இந்த இரண்டாவது ஹீரோயின் கதாபாத்திரத்திற்கு முதலில் அப்பாஸ் அவரை தான் அணுகி உள்ளார் ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர் அந்த திரைப்படத்தில் நடிக்காமல் போன பிறகு அஜித்தை இந்த திரைப்படத்தில் கமிட் செய்தது படக்குழு.
அப்போதைய காலகட்டத்தில் அஜித்தை விட அப்பாஸ் தான் பெண் ரசிகைகளை அதிகம் வைத்ததோடு சாக்லெட் பாயாக வலம் வந்தார் அதனாலேயே குணச்சித்திர கதாபாத்திரங்களில் என்றால் அப்பாஸ் அவர்களை கமீட் செய்யத் தான் விரும்பினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது அவர் நடிக்க விட்டால்தான் மற்ற நடிகர்களை இரண்டாவது கதாபாத்திரத்தில் கமிட் செய்ய முன்னேறுவார்கள் இயக்குனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.