தமிழ் சினிமாவில் 90 கால கட்டங்களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் ராமராஜன். இவர் 1986ஆம் ஆண்டு நம்ம ஊரு நல்ல ஊரு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார். அதன் பிறகு எங்க ஊரு பாட்டுக்காரன், கிராமத்து மின்னல், ராசாவே உன்னை நம்பி, எங்க ஊரு காவல்காரன், கரகாட்டக்காரன் என பல படங்களில் நடித்து அசத்தி வந்தார்.
இவர் ஆரம்ப காலத்தில் இயக்குனராக தன்னை அறிமுகப்படுத்தி சினிமா உலகிற்கு அறிமுகமானார். இவர் 1965ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் மண்ணுக்கேத்த பொண்ணு என்ற திரைபடத்தை இயக்கினார். இதனையடுத்து அவர் பல படங்களை இயக்கியுள்ளார் அந்த வகையில் ஹலோ யார் பேசுவது, மருதாணி போன்றவை ஆகும்.
இவர் கடைசியாக நடித்த படம் மேதை என்பதாகும். தற்பொழுது இவர் 19 வருடங்களுக்குப் பின்னர் இயக்குனராக பணியாற்றுகிறார் என்ற தகவல் வெளிவந்துள்ள. அப்படத்தின் ஹீரோ விஜய் சேதுபதி ஆவார்.
இந்த நிலையில் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ரஜினி ,கமலை காட்டிலும் ராமராஜன் அவர்களே முதல் முதலில் ஒரு கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.