“மாநாடு” படத்தில் முதலில் நடிக்க இருந்த ஹீரோ இவரா.? புகைப்படம் கசிந்ததால் படத்தை நிராகரித்த நடிகர்.?

maanaadu-
maanaadu-

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் வெங்கட்பிரபு இவர் இதுவரை பல்வேறு டாப் நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார் மேலும் பல பிரபலங்களை வைத்து படங்களையும் இயக்கியுள்ளார். வெங்கட் பிரபு அஜித்திற்கு மங்காத்தா படத்தை கொடுத்ததை தொடர்ந்து பல்வேறு படங்களை நடிகர்களை வைத்து இயக்கி அசத்தினார்.

ஒரு கட்டத்தில் நடிகர் விஜய்யை வைத்து இயக்க ஆசைப்பட்டார் ஆனால் அது நிறைவேறாமல் போனது இருப்பினும் ஒருவழியாக நடிகர் சிம்புவுடன் கைகொடுத்த மாநாடு என்ற திரைப்படத்தை எடுத்து அசத்தி உள்ளார் இந்த திரைப்படம் நேற்று கோலாகலமாக திரையரங்கில் வெளியானது.

படம் டைம் லூப்பை மையமாகக் கொண்டு இருந்தாலும் தமிழ் மக்களுக்கு புரியும் படி சிறப்பாக இருந்ததால் இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. மேலும் சிம்பு எஸ் ஜே சூர்யா ஒய்ஜி மகேந்திரன் எஸ் ஏ சந்திரசேகர் ஆகியோர் தாமதமாக கதைக்கு புரிந்து உள்ளதால் படம் வேற லெவலில் இருப்பதாக கூறுகின்றனர்.

நிச்சயம் இந்த படம் சிம்புவின் கரியரில் ஒரு பிளாக்பஸ்டர் படமாக அமையும் என கூறப்படுகிறது மேலும் வழக்கமான சிம்பு நடிப்பில் இதில் இல்லாமல் படத்தின் கதைக் ஏற்றப்படி இதில் அவர் நடித்துள்ளதால் அவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இது இப்படி இருக்கின்ற நிலையில் இந்த திரைப்படத்தில் சிம்புவுக்கு முன்பே தளபதி விஜய் தான் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஆம் ஒரு கட்டத்தில் வெங்கட் பிரபு விஜய்யை உள்ளார் அது ஆரம்பத்தில் கைகூடியதாம் இதற்காக பார்ட்டி எல்லாம் ஒன்று நடந்தது அப்போது விஜய் கூட கலந்து கொண்டார் அதன் புகைப்படங்கள் எல்லாம் வெளியே கசிந்தது இதனால் விஜய் நைசாக அந்த படத்தில் இருந்து கழன்று கொண்டாராம் அதனால் அந்த பட வாய்ப்பு தற்போது மாநாடாக உருவாகி சிம்பு கைக்கு போனதாக கூறப்படுகிறது. இச்செய்தியை பிரபல பத்திரிகையாளர் அண்மையில் தெரிவித்துள்ளார்.