விஜய்க்கு வில்லனாக “வாரிசு” படத்தில் நடிக்கப் போவது யார் தெரியுமா.? படக்குழு ஒளிச்சு வைத்திருக்கும் ரகசியம்.!

vijay-
vijay-

ரஜினிக்கு அடுத்தது தமிழ் சினிமாவில் அதிக வெற்றி படங்களை கொடுத்தவர் நடிகர் விஜய். பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து இவர் தனது அடுத்த படமான வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் இது விஜய்க்கு 66 வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குகிறார் தில்ராஜு மிக பிரம்மாண்ட பொருட் செலவில் தயாரித்து வருகிறார்கள்.

இந்த படத்தின் ஷுட்டிங் தற்போது விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது இந்த படத்தில் விஜய் உடன் கைகோர்த்து ஜெயசுதா, குஷ்பூ, ராஷ்மிகா மந்தனா, ராதிகா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷாம், எஸ் ஜே சூர்யா, மனோபாலா மற்றும் பல பிரபலங்கள் நடித்து ஓடிக்கொண்டு இருக்கின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங்கில் இருந்து அவ்வபோது புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளியாகி கொண்டே இருக்கின்றன.

இப்படி இருக்கின்ற நிலையில் தற்போது வாரிசு திரைப்படம் குறித்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க போவது யார் என்பது தான். வாரிசு திரைப்படத்தில் விஜயின் பெயர் விஜய் ராஜேந்திரன் என வைக்கப்பட்டுள்ளது. விஜயின் அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார் விஜயின் அம்மாவாக ஜெயசுதா நடிக்கிறார்.

ஸ்ரீகாந்த் மற்றும் ஷாம் ஆகியவர்கள் சகோதரர்களாக நடிப்பதாக சொல்லப்படுகிறது ஆனால் வில்லன் யார் என்பது மட்டுமே தற்போது வரை தெளிவாக தெரியவில்லை. எஸ் ஜே சூர்யா, பிரகாஷ்ராஜ் போன்றவர்களும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை என சொல்லிவிட்டார்கள். இதனால் வில்லன் யார் என்பது தற்போது மிகப்பெரிய ஒரு கேள்விக்குறியாக இருக்கிறது.

ஆனால் இந்த படத்தில் விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம் அதில் ஒன்று நெகட்டிவ் கதாபாத்திரம் என தெரிய வந்துள்ளது. அண்மைக்காலமாக ஹீரோக்கள் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிப்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அந்த வகையில் இந்த படத்தில் விஜய் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கலாம் என சொல்லப்படுகிறது.