ஆக்சன் திரைப்படங்களை எடுப்பதில் கைதேர்ந்த இயக்குனராக பார்க்கப்படுகிறார் லோகேஷ் கனகராஜ். இவர் இதுவரை மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற ஆக்சன் படங்களை கொடுத்து வந்த நிலையில் முதல் முறையாக கமலஹாசனை வைத்து விக்ரம் என்னும் படத்தை இயக்கினார் .
இந்த படம் முந்தைய படங்களை விட ஆக்ஷனுக்கு பஞ்சம் இல்லாமல் இருந்ததால் தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது.ன் இது வரை மட்டுமே விக்ரம் திரைப்படம் சுமார் 340 கோடி உலக அளவில் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன மேலும் இந்த திரைப்படம்.
தமிழை தாண்டி பல்வேறு இடங்களில் வசூல் கோடிகணக்கில் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன இதனால் படக்குழு சந்தோஷத்தில் இருக்கிறது குறிப்பாக கமல் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறார் காரணம் இந்த திரைப்படத்தை அவர்தான் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து உலக நாயகன் கமலஹாசன்.
இந்தப் படத்தில் பணியாற்றிய இயக்குனர் உதவி இயக்குனர் மற்றும் சூர்யா போன்றவர்களுக்கு பரிசு பொருட்களை கொடுத்து அழகு பார்த்தார். இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்தில் இருந்து மற்றொரு சூப்பரான தகவல் வெளியே கசிந்துள்ளது. அதாவது விக்ரம் படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் திரைப்படமாக கொண்டுவர தான் லோகேஷ் பார்த்தார்.
ஆனால் விஜய் சேதுபதி ரோல் -க்கு மூன்று மனைவி என்பதால் சற்று சீன்கள் ரொமான்டிக் காட்சிகள் வைக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டது. இருப்பின்னும் லோகேஷ்க்கு விருப்பம் இல்லை அதனால் விஜய் சேதுபதி ரொமான்டிக் காட்சிகளில் அனைத்தையுமே சாண்டி மாஸ்டர் தான் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. நடன காட்சிகளையும் சாண்டி மாஸ்டர் தான் எடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன அப்படி பார்த்தால் படத்தில் பாதி சாண்டி மாஸ்டர், மீதி பாதி லோகேஷ் எடுத்து உள்ளனரா.. என ரசிகர்கள் கேட்கத் தொடங்கிவிட்டனர்.