கோடான கோடி ரசிகர்களை தக்க வைத்துள்ளவர்கள் அஜித் மற்றும் விஜய். இவர்கள் இருவரும் பல தடவை படங்கள் மூலம் மோதினாலும் கடந்த எட்டு வருடங்களாக சோலோவாக படங்களை இறக்கி வந்த நிலையில் எதிர்பாராத விதமாக இந்த பொங்கலுக்கு அஜித்தின் துணிவு, விஜயின் வாரிசு படங்கள்..
நேருக்கு நேராக மோதி உள்ளன. இந்த ரேசில் விஜய் கைதான் ஓங்கும் என படம் ரிலீசுக்கு முன்பே பலரும் சொல்லி வந்தனர் ஆனால் படம் வெளிவந்து அதற்கு எதிர் மாறாக அமைந்துவிட்டது துணிவு படம் முழுக்க முழுக்க ஆக்சன் மற்றும் சமூகக்கரை உள்ள கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதால்..
அனைத்து தரப்பட்ட மக்களையும் கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்று சூப்பராக ஓடிக்கொண்டிருக்கிறது. விஜயின் வாரிசு திரைப்படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிட் கலந்த படமாக இருந்தது. மேலும் ஏற்கனவே பார்த்த கதையை மீண்டும் உருவாக்கி இருப்பதால் இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருக்கிறது.
இருப்பினும் இரண்டு திரை படங்களும் நல்ல வசூலை அள்ளி வருகின்றன. மூன்று நாட்களில் இரண்டு திரைப்படங்களுக்கான வசூல் சற்று ஏற்று இரக்கமாக இருந்து வந்தது இப்படி இருக்கின்ற நிலையில் விஜயின் வாரிசு, அஜித்தின் துணிவு திரைப்படங்கள் 5 நாள் முடிவில் எவ்வளவு வசூலித்து என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி பார்க்கையில் துணிவு திரைப்படம் தமிழகத்தில் 65 கோடியும், விஜயின் வாரிசு திரைப்படம் 63 கோடியும் வசூல் செய்துள்ளதாம்.. ஐந்து நாள் முடிவில் அஜித்தின் துணிவு திரைப்படமே அதிக வசூலை அள்ளி முதலிடத்தை தகவைத்துள்ளது வருகின்ற நாட்களில் பார்ப்போம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்..